ஒருங்கிணைந்த தியானயோகங்களின் தொகுப்பு

 

இயல்பார்ந்த தியானத்தில் உணர்வை உங்கள் உயிரிலே மோதச் செய்தால் “கிரியை”

 

இயல்பார்ந்த தியானம் என்பது ஒருங்கிணைந்த தியானயோகங்களின் தொகுப்பே அன்றி வேறில்லை. இந்த தியானத்தின் உண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகப் புரிந்து கொண்டு அது சுட்டிக்காட்டும் உண்மைப் பொருளைத் தன் ஆத்ம நிலையாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.

 1. இசை தியானம்: (Music Meditation:)

அரிதான இசையில் மனம் ஒன்றித் தியானித்தாலும், அது போன்றே பிற பொருள்களைத் தியானித்தாலும் அந்த மகிழ்ச்சியோடு மனம் ஒன்றி விரிந்து பரவும். மனமும் மகிழ்ச்சிகளும் ஒன்றுபடும். ஞானேந்திரியம் அனுபவித்ததை மனம் ஏற்பதும் மனம் ஏற்றதை மகிழ்வாக ஆத்மா அனுபவிப்பதும் ஆகிய செயல்பாடுகளால் ஒன்றில் ஒன்ராக இருந்து மகிழ்ச்சியை உணரும் தெய்வீக நிலையை அறியலாம். மனம் ஒன்றில் மட்டும் முழுமையாக ஈடுபட்டு பிற பொருள்களில் உள்ள ஈடுபாட்டை அந்த நேரத்தில் இழக்கிறது.

2. யோகதியானம்: (Yoga Meditation:)

வலது பிருஷ்டத்தை தரையில் படிய வைத்து, இடது பிருஷ்டத்தை மேலே உயர்த்தி மடித்து, இடது கால் பாதத்தை வலது தொடைமீது பதித்து, இரு கைகளால் இடது முழங்காலைக் கோர்த்து உயர்த்துவது போல முதுகு வளையாது கேசரி முத்திரையாகப் பார்த்து இருந்தால் அமைதிக்கு காரணமான சத்துவ குணம் அதிகமாகும். வலம் இடம் மாற்றி செய்யலாம்.

3. மனம்சார்ந்த தியானம்: (Mindfulness-based  Meditation:)

 மனம் அமைதி காணும்படி அமர்ந்து, கைகள் இரண்டையும் தலைவரை உயர்த்தி, மடக்கித் தலையில் இரு கைகளும் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் வைத்துக் கொண்டு அக்குள் குழிகளையே பார்த்து மாறி மாறிப் பார்த்து மனம் ஒன்றினால் அமைதி உண்டாகும். அக்குள்களில் வெளிக்காற்று பட்டால் நிணநீர் மையங்கள் சாந்தியடைவதால் மனம் அமைதி இயற்கையாக ஏற்படும். இந்த தியானத்தில் உலகம் சார்ந்த எண்ணங்களை மனம் நினைவுக்கு கொண்டுவராத அந்த நடுப்பகுதியில் மனத்தின் விரிவு அடங்கி எண்ண அலைகள் சுருங்கி இருப்பதால் பரவுலகம் பரம்பொருள் முதலியன உணரலாம்.

 

4. சத்திதியானம்: (Sathi Meditation:)

மூலாதாரச் சக்கரத்தில் உள்ள சக்தியைத் தியானம் செய்தால் அந்த சக்தி நுண்ணிய துகள்களாக மேலே சென்று துவாத சாந்தத்தில் கலந்து மறையும்போது சத்தி இடைக்கும். முதுகு எலும்பின் அடியில், நீர்விடும் உறுப்புக்கு கீழே இருவிரல், மலவாயிலிருந்து மேலே இருவிரல் தூரத்திலிருப்பது மூலாதாரம் என்ற ஒரு ஆதாரத் தாமரையாகும். எல்லா உயிர்களுக்கும் உடம்பின் கீழ்ப்பகுதில் உள்ள இதில் ஒளிமிகுந்த ஜோதிவடிவமான குண்டலினி சக்தி உள்ளது. இதிலிருந்துதான் பிராண சக்தி புறப்பட்டு மார்பின் நடுவில் சேகரிக்கப் பட்டு மூச்சு வெளியேறும்போது துவாத சாந்தத்தில் சேரும் இதை பிராண குண்டலி என்பர். நெருப்பை ஊதினால் கனிந்து எரிவது போல் தியானத்தாலும் பிராணாயாமத்தாலும் குண்டலினி நெருப்பைக் கனிய வைத்து மிகுதியாகும்போது ஓரளவு நுட்பமாக மேலே சுழுமுனை நாடி வழியே செல்லும். பிராண சக்தி துவாத சாந்தத்திற்கு போகும்போது இந்த மையநாடி வழியாக போகும். குண்டலினியைத் தியானிக்கும்போது சக்தியுடன் ஒளித் துகல்களும் இதே நாடிவழி போகும். பிராண சக்தி உள் துவாத சாந்தத்தோடு முடிந்து போகும். குண்டலினி ஒளித்துகள்கள் வெளி துவாத சாந்தம் வரை போகும். இப்படி குண்டலினி ஒளித்துணுக்குகள் சகஸ்ரராம் என்னும் பிரம்மரந்திரத்தில் சேர்வதே யோக சித்தியாகும்.

5. குண்டலினிதியானம்: (Kundalini Meditation:)

தியானம் செய்யும் போது சுழுமுனை நாடி வழியே பிராண சக்தி உச்சியை நோக்கி எறும்பு ஊர்வது போல்செல்லும் நேரத்தில் தெய்வீகமான அனுபவம் உண்டாகும். தியான முயற்சியில் சுழுமுனை நாடியில் பிராணசக்தி அதிகமாகச் செல்லும். பொறி புலன்களில் வரும் உணர்வுகளை மூடி அடக்குவதால் குண்டலினியின் ஒரு பகுதியான பிராணசக்தி மேலும் மிகுதியாகச் செல்லும். ஐம்பொறிகளை அடக்கும்போது அவைகளால் உண்டாகும் அறிவு, உணர்வு, கற்பனை முதலியன தடைப்படுவதால் மனம் தன் பரபரப்புத் தன்மையை இழந்து இருப்பதாலும் குண்டலினி உயர வாய்ப்புகளாகும். அப்போது சத்தியின் காட்சியை உணரலாம்.

6. சக்கரதியானம்:(Wheel Meditation:)

குண்டலினி சக்தி மேலேறும்போது கீழிருந்து மேலாக உள்ள சக்தி மையங்களை கடவுள் வெளிப்பட்டு நம் உணர்வுக்கு வரும்வரை பிஜ மந்திரங்களைக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை தியானிக்கும்போது அது நெருப்பாகக் கனிந்து மேல் நோக்கி ஆறு யோக ஆதாரக் கமலங்கள் வழியாகவும் அதற்கு இணையான இடங்களிலும் குண்டலினி சக்தி வெளிப்படும். தியானம் படிப்படியாக உயர்ந்து மேலே போவதை உணரும்போது தியானம் தொடங்கிய இடத்தையும் அது முடியும் இடத்தையும் நினைந்தால் குண்டலினி சக்தி தொடர்ந்து கீழிருந்து மேலே வந்து கொண்டிருக்கும். பிஜ மந்திரங்களுடன் இச்சக்தி மையங்களை இனைத்துப் பழகி பதிவாகினால் தியானிக்கும்போது தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு மின்னல் கொடியாக ஒளியும் உணர்வும் நம் உணர்வுக்கு வரும்.

7. பிராணதியானம்: (Prana Meditation:)

இயல்பார்ந்த சக்தியால் விரைந்து மனதைச் சுத்தமாக்கி அமைதியுறச் செய்கிறது. பிராண ஆற்றலை வலுமைப்படுத்தி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதில் உள்ள உபாதைகளை நீக்குகின்றது. தொடர்ந்த தியானத்தால் பிராணனை மேலும், மேலும் விழிக்கச் செய்து பிரபஞ்ச ஆற்றலுடன் ஒரு மெய் ஈர்ப்பு ஏற்படுத்துகின்றது. அதாவது அதீதம் முதிர்ந்த நிலையில் உள்ளானந்த ஒலி ஜீவனைத் தொடும் பொழுது ஆத்ம பேரொளியாக உடலில் பரவும்.

இவை ஒவ் வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன.

8.மூச்சுதியானம்: (Breath Meditation:)

மூச்சை இழுப்பது, வெளிவிடுவது என்ற செய்கைகள் கும்பக முறையால் கட்டுப்படுத்தப் பெறும்போது சாந்தம் ஆகி மனஅமைதி சக்தி உண்டாவதால் இது சாந்த சக்தி நிலை எனப்படும். உள்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் கும்பகம் செய்வதால் பிராண சக்தியே சாந்த சக்தியாக மாறும். பிராணன், அபானன் சக்திகள் நிர்விகல்பமாகி பிரித்தறிய முடியா நிலையில் அவை இல்லாது போவதால் அதன் விளைவாக வரும் புதிய நிலையே சாந்த சக்தி நிலை யாகும். எல்லாவற்றையும் விகல்பித்து பிரித்து உணரும் போது தான் உயிருடன் இருப்பதை உணர்வதற்கும், தூங்குகிறோம், விழிக்கிறோம் என்பவைகளை உணர சிறிதளவாவது ஆணவம் வேண்டும் அந்தச் சிறிதளவும் இல்லாத நிலை நிர்விகல்ப நிலை அதாவது சாந்த நிலை எனப்படும். நிர்விகல்ப நிலையில் உண்டாகும் சாந்ததை உணர்கிற உணர்ச்சி இல்லாமல் போகும். அந்த மேனியிலும், பாவனைகளிலும் முகத்திலும் தோன்றும் தேஜஸ் முதலிய திவ்ய ஒலியால் இது பிறரால் உணரப்படும். நிர்விகல்ப நிலைக்குப்போய் திரும்ப விகல்ப நிலைக்கு வந்தபின், தான் இதுவரை சாந்த நிலையில் இருந்ததை உணரமுடியும்.

9. முத்திரைதியானம்: (Seal Meditation:)

பிருத்வி முத்திரை, தியான முத்திரை, ஞான முத்திரை, அதீதம் உத்திர போதி முத்திரை, சின் முத்திரை ஆகிய  முத்திரைகளைச் செய்யும்போது ஞானேந்திரியம், இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், மூளை முதலிய உறுப்புகளில் மின்காந்த அலைகள் நன்கு செயல்பட்டு தியான முயற்சிக்கு துணைபுரியும். கைவிரல்களால் செய்யும் முத்திரைகளிலும், உடம்பின் உறுப்புக்களால் செய்யும் முத்திரைகளாலும் மின்சக்தி வேறுபாடு அடையும். இந்த முத்திரைகள் மூலம்இயற்கைச் சக்தியை நமது உடலிலுள்ள முக்கியமான நாடிகளுக்கு இட்டுச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவை விழிப்படையச் செய்கின்றது.

 10.மந்திரதியானம்: (Magical Meditation:)

இதைத் தினமும் காலை, மாலை இரு முறை செய்வதால் பஞ்ச பூதங்களையும் அவற்றின் சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. லம், வம், ரம், யம், ஹம், ஓம் இந்த இயற்கை ஓசைகளை பிரணவத்துடன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும். அஊம், அதீதம் இவற்றை மவுனத்தில் உச்சரிக்கும் போது அதிலிருந்து மனம் சுடர் பிரிவதைப் பாவனையில் உணர வேண்டும். இது நடனத்தில் எழிலை விவரிக்கும். இதனை ஒலியின் பயணம் என்று கொள்ளலாம். அதனுடைய இருப்பை அறிய, அறிய நிறைய மனப்பக்குவம் வந்து கொண்டே இருக்கும். அது உடலில் இருக்கிறது. உடலுக்கு வெளியே இருக்கிறது. உணர்வுக்கு உணர்வாகவும் அறிவின் தீர்க்கமாகவும் இருக்கிறது.

11. தியானம்வடிவம்தியானம்: (Meditation form Meditation:) 

இயல்பார்ந்த தியானத்தில் தியானம் செய்யும் வடிவம் பழமையானது. நுட்பமானது. இந்த வடிவத்தினைப் தியானம் செய்யலாம். எல்லா தியானத்தைக் காட்டிலும் இயல்பார்ந்த தியானத்தில் விரைவாகப் பயனை அடைய இந்த வடிவம் நமக்கு உதவுகிறது. இது நமது இலக்கை விரைவாக எடுத்துச் செல்கிறது. இந்த வடிவத்தில் அவரவர் வழிபடும் இறைவனை வைத்து வழிபட்டால் அவர்கள் இலக்கை நோக்கிப் பல மடங்கு வேகத்தில் செல்ல இந்த வடிவமைப்பு உதவுகிறது. இந்த இயற்கையின் அச்சின் சக்தி ஒன்றே இருவிதமாகச் சீரான ஆற்றலை ஒருங்கிணைத்துச் சக்தியைக் கொடுக்கிறது. இந்த இயற்கை அச்சு என்பது 23.5 டிகிரி கோணமாகும். இந்த இயற்கை அச்சின் பேரியக்க மண்டல ஒருங்கிணைப்பு ஆற்றல் மிகப்பெரிய சக்தியாக அனைத்திலும் உள்ளடக்கிச் சீராக இயக்கச் செய்கிறது. இது பிரபஞ்சத்துக்குள்ளேயும், வெளியேயும் அண்டசராசரம் முழுவதும் இந்த ஆற்றல் மிகத் துல்லியமாக இயங்கிச் சக்தியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

 

12. இயற்கைஆராதனை தியானம்: (Natural Adoration Meditation:)

இவ்விடத்தில் நுண் அதிர்வால் இயற்கை மெய்ப்பொருளை ஆராதனை செய்வதால் மெய்யுணர்வோடு, இயல்புணர்வும் ஈர்க்கப்பட்டு முச்சுடர் விரிந்து ஒலியே ஒளியாகின்றது. அந்த ஆத்மா அக, புற அதீதத்தின் சூக்கும பயணத்தை உற்று உற்று உணர்தல் மேன்மையானது.

13. சூக்குமசக்திதியானம்: (Sukkum Shakti Meditation:)

அக புற அதீதம் சூக்கும சக்தியில் செல்லும். அதன் சூக்குமப் பயணத்தை உற்று, உற்று உணர்ந்தால் இருள் அகன்று ஒளி தரும். முக்தி நெறிக்கு வெளிச்சம் கொடுப்பது இது ஒன்றே. அதை உனக்குள் காண முடியா விட்டால் நீ வேறெங்கும் தேடுவது வீண். இது பஞ்ச அவையங்களிலிருந்து மேம்பட்டதாய் உள்ள துரியாதீதத்திற்கு நின்று மெய்ஞ்ஞானப் பெருவிழிப்பில் அக புற சூக்கும சக்திகள் ஒன்றும் இடத்தை நோக்கும். பரிசுத்த ஜீவனால் மூன்று வாசல்களும் ஒவ்வொன்றாகத் திறக்க வைத்து மெய்ப்பொருளைக் கொண்டு வந்து அங்கேயுள்ள அதீதம் பேரொளியைக் கண்டு உள்ளானந்தம் அடைதல் வேண்டும்.

 

இந்த ஐந்து அவத்தைகளும் நம் உடலில் அன்றாடம் ஏறியும், இறங்கியும் வருவதை நாம் உள் முகமாக கூர்ந்து கவனித்தால்,   உணரலாம்.

 14. துரியம் தியானம்: (Turiyam Meditation:)

ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். இதுவே துரிய தியானமாகும்.

15. துரியாதீதம் தியானம்:

துரியம் அதிதமாகும் பொழுது துரியாதீதம் சித்தி ஆகும் என்று சொல்வார்கள். அதாவது தலை உச்சியில் உள்ள  துரிய சக்கரத்தில் ஆழ்ந்து செல்லும் பொழுது உடலில் இருந்து சக்தி வெளியே விரிந்து பிரபஞ்சத்துடன் இணையும் தன்மை, தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். துரியம் என்பது உச்சியில் செய்வது. ‘அதீதம்’ என்றால் ஜாஸ்தி துரியம் மிக அதிகமாகப் போய் விட்டால் துரியாதீதம். துரியத்தின் அதீத நிலை துரியாதீத நிலை – உயிர்ப்பு எனப்படும் பிராண வாயுவும் அடங்கி இருக்கின்ற நிலை.

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் மட்டுமே. இந்த நிலையைத்தான் உயிர்ப்படக்கம் என்பார்கள். எண்ணங்கள், உணர்வுகள் அடங்கிய நிலை. பிரபஞ்சத்தில் கரைந்து நிற்கும் நிலை என்றும் கூறலாம். இதுவே ஞானத்தின் உச்சம். முடிவான முடிவு.

 16. கோச தியானம்:

அந்த உணர்வு ஒருபோதும் உடலாகவோ, மனமாகவோ, வேறெந்த கோசங்களுடனான தொடர்பாகவோ இருக்காது. அந்தக் கணத்திலேயே உங்களுக்குள் இந்த நான் யார் எனும் ஆத்ம விசாரத்திற்கான விழைவு தொடங்கி முடிந்து விடும்.

17. உள்அனந்தம்தியானம்: (Internal infinity Meditation)

அந்த உள்ளானந்தம் அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும். இயல்பார்ந்த தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில் இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள். இந்த தியானத்தில் இகபுத்திகள் படிப்படியாக அழிந்து புத்தியிலிருந்து விலக்கிவிட்டு இதய வெளியில் உள்ளானந்தமாக மாறுகிறது. இந்த நிலை பெற்றவர்கள் என்றும் உள்ளானந்தமாய் உள்ளானந்தமே இவராய் இருக்கும் நிலை வரும். இவர்கள் உலக சுபிட்சத்திற்கு வினையாற்றுவர். அண்டவெளியில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முழுமை அடைவர்.

18. பிரபஞ்ச தியானம்:(Cosmic Meditation)

இதுதான் இயல்பார்ந்த தியானம் நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். நாள்கள் அதிகமாக செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பெறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும். இதை தெய்வீக வடிவம் என்றும் கூறலாம். இம்மாற்றமே ஆன்மீக உயர்வுக்குத் திருப்புமுனை. தனது உயிர் எப்படி இருக்கும் என்பதை ஐம்புலனில் ஒன்றான ஊறுணர்ச்சிக்கு எட்டச் செய்து அதன் மூலமாக மனத்திற்கு அகமுக திசை கொடுக்கப்படுகிறது இதுவரை மனம் வெளியில் பார்த்துக் கொண்டிருந்தது வெளிப்பொருட்களில் சிக்கிக் கொண்டு இருந்தது. இனி அது உள்ளே பார்க்கும் அதாவது தன்னையே பார்க்கும் உள்ளொளி பூரித்து உயிருக்கு மேனோக்கு வேகத்தைத் தரும்.

19. சாந்திதியானம்: (Shanti Meditation)

சாந்தி தியானம் என்பது உடலையும், மனதையும் சமநிலையை படுத்தி அமைதியுற செய்வதுதான். இதனால் உடல் குளிர்ச்சி அடையும், உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும். நிலைக்கும். இதனால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும். சாந்தியோகத்தின் காரணமாக, தேவைக்கேற்ப உடல் சக்தியை மனோசக்தியாகவும், மனோசக்தியை உடல்சக்தியாகவும் மாற்றி மாற்றி பயன்படுத்தி துய்க்கிறோம்.

ஐம்புலன்களாக விரிந்து பழகிய மனம், ஆக்கினையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது. துரிய தவத்தில் ஒரு புலனும் மறைய மனம் என்ற விரிந்த நிலை குன்றி, உயிர் உயிராகவே நின்று தனது அடக்கத்தில் பிரம்ம மாகவே அமைதி பெறுகிறது துரியத்தில். துரிய நிலையில் நாம் உயிரை பற்றி நினைத்திருந்து உயிராகமட்டுமே இருக்கிறோம் .இங்கு மனம் செயல்படுவதில்லை. ஆக்கினை தவத்தில் மனம் உயிரை கவனிக்கிறது. துரியத்தில் மனம் தன இயக்கத்தை நிறுத்திகொள்கிறது. மன இயக்கம் என்றால் உயிர்.துரியத்தில் உயிர் உயிராக  நிற்கிறது. துரிய  நிலை தவத்தில் மனம் ஒழிந்து தான் தானாகவே நின்ற உயிர் இங்கு மூலத்தை அறிகிறது. தன்மூலமாகவே ஆகி பிரம்மமாகி விடுகிறது. இதுவே துரியாதீதம். துரியாதீதமே ஜீவப்ரம்ம ஐக்கிய முக்தி. எந்த அதிர்வியக்கத்தில் மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதி நிலை. ஜீவகாந்ததின்      விளைவுதான் மனம். மனம் மூலத்தை அடைந்த பிறகுதான் அமைதி அடைகிறது.

20. முழுமையானதியானம்: (Holistic Meditation)

ஆத்மாவை யார் எனத் தெளிதற்கு மெய்யறிவு வேண்டியதாகும். அது மன உணர்ச்சியும் அல்ல; மூளையில் சேமித்து வைக்கப்படும் அறிவுச் சம்பாத்தியமும் அல்ல. அதை ஒருபோதும் நினைவுத் திறனால் மீட்டு எடுத்தல் இயலாது. மனோலயம் ஏற்படும் போது அது ஆத்மஇதயத்தில் சுயமாகவே உள்ளிருந்து மலருவதாகும். இயல்பார்ந்த தியானத்தில் பக்தி என்பது மிகவும் வலிமை வாய்ந்தது. இது போலித்தனமான தற்புகழ்ச்சியைப் பெருமளவில் கரைத்து விடுகின்றது. இயல்பார்ந்த தியானத்தில் தெய்வீக அதிர்வுகளை உணர்வது செவி மடுப்பது சேவை செய்வது அவரைச் சரணடைந்து விடுதல் இவற்றைப் பக்தி என்னும் மேடையில் ஏற்றிவிடுவது இறைவனுக்கு மகிழ்வோடு செய்கின்ற சேவையாகும். இயல்பார்ந்த தியானத்தைத் தொடர்ந்து செய்தால் உங்களது உடல், மனம், ஆத்மா ஆகிய அனைத்திற்கும் இதம் அளிக்கும். அறிவுக்குக் குணம் அளிக்கும்.

21. இயல்பார்ந்ததியானம்:(Innate Meditation)

ஒருங்கிணைந்த 21 தியானயோகங்களின் தொகுப்பில் தியானம் செய்யும் போழுது நமது மெய்யுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.

இயல்பார்ந்த தியானத்தில் திருப்தியும், அதன் காரணமான மகிழ்ச்சியும் இறை அருளினால் ஏற்பட்ட பரமானந்த வடிவம் என்பது வெளிப்படும். ஆழ்ந்த தியானத்தின்போது வேறு எல்லாம் மறந்து விலக மனமும் தியானிக்கப்படும் மகிழ்ச்சியும் மட்டுமே இணைந்து பரமானந்தம் என உணரலாம்.