ஐயம் தெளிதல்

விஞ்ஞானத்தால் விடைவிளம்ப இயலாத பல வினாக்களுக்கு மெய்ஞ்ஞானமே விடையிறுக்கிறது.

 

எண்ணம் என்பது கேள்வியில் தூண்டல் – பதிலில் தெளிவு –  தியானத்தில் நிறைவு.

மாணாக்கர்: எதற்காக இவ்வுலகத்தில் பிறந்தோம்

ஆசிரியர் 01: பிறப்பின் நோக்கத்தை அறிவதற்காகவே இவ்பிரபஞ்சத்தில் வந்துள்ளோம் பிரபஞ்ச அறிவுடன் வாழும் வாழ்க்கை மானுடப் பிறவியின் படிநிலை வளர்ச்சியின் உச்சம் எனலாம். இது மானுட வாழ்வியலுக்கு வேண்டிய அனைத்தும் தெய்விகக் கூட்டமைப்பில் இணைந்த பயிற்சி முறையாகும். மனித வாழ்வின் நோக்கத்தை அடைய இரு வழிகள் உண்டு என்று வாழ்வியல் முன்னோடிகளான சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். திருமூலரும் திருமந்திரத்தில் இதை உறுதிப்படுத்துகிறார். அவை 1) தவம், 2) அறம் என்பனவாகும். இவை இரண்டுமே, மனிதனை விலங்கினங்களிலிருந்து சிறப்பாக வித்தியாசப் படுத்துகின்றன.

மாணாக்கர்:  1. இறைவன் நம்முள் எங்கு இருக்கிறான்?

ஆசிரியர் 01: இறைவன் தன்னை மறைத்து 96 தத்துவங்களாக, மனிதனாக இருக்கிறான். இதில் 5 கோசங்கள் அல்லது அடுக்குகள் அடங்கும். அவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன.

மாணாக்கர்:   2. உயிர் (ஆத்மா) என்றால் என்ன?

ஆசிரியர் 02: பொதுவாக மனிதர்களுடைய நிலைப்பாடும் அறிவியலும் வேறுவேறாக உள்ளது. இயல்பான இயக்கம் உடையன உயிர் எனலாம். உயிர் என்றால் மனம்அற்ற நிலையில் உச்சிவெளி கடந்து பரவெளியாகிய பிரபஞ்சத்தில் இரண்டறக் கலந்த நிலை.

உயிர் + மனம் = ஆத்மா ஆகும்.  மனமானது தனது சொரூபமாக ஆத்மாவின் மீது வீழ்ந்த போர்வைதான்.

ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) அகத் தியானத்தால் தியானிக்கப்பட வேண்டியது.

இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும்.

மாணாக்கர்:   3. ஆன்மிகத்தின் பயன் என்ன?

ஆசிரியர் 03: உலகச் செயல்கள் எல்லாம் பயன் கருதி செய்யப்படுகின்றன. உலகச் செயல்களைப் பயன் கருதாது பகவான் பொருட்டுச் செய்யும்பொழுது அது ஆன்மிகம் எனப்படும். உலகப்பற்றை வளர்ப்பது உலகாயதம். உலகக் காரியங்களைப் பற்றுடன் செய்தால் அவை உலகப்பற்றை வளர்த்துத் துன்பத்துக்கும், மயக்கத்துக்கும் நம்மை ஆளாக்குகின்றன.

ஆத்மா என்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் அப்பால் உள்ளது. ஆத்மா பொறி புலன்களுக்கு எட்டாதது. அது மனதுக்கு அப்பாற்பட்டது. புலன் நுகர்ச்சியைக் கடந்து அருள் உணர்ச்சியை மனதில் உண்டாக்கும் பொழுதுதான் ஆத்மதரிசனம் கிடைக்கும். ஆத்மதரிசனம் பெறுவதைத்தான் ஆன்மிகம் என்கின்றோம். ஆன்மிகம் ஒப்பற்ற உயர்ந்த நிலையாகும். ஆன்மிகத்துக்கு மேல் உயர்ந்த நிலை இல்லை. உயர்வற உயர்நலத்தை நல்குவது ஆன்மிகம். ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்ற நிலையை ஆன்மிகத்தால் பெறலாம். ஆன்மிக வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கை எதுவும் இருக்க முடியாது. பேரறிவையும், பேரின்பத்தையும், பேராற்றலையும் ஆன்மிகத்தின் மூலம் பெறலாம். சாந்தி, அடக்கம், அமைதி, அருள்நிலை ஆகியவற்றை ஆன்மிகம் நல்குகின்றது. ஆன்மிக வாழ்வு வாழ்கின்றவன் அழியாப் பெருவாழ்வை அடைகின்றான். மரணமிலாப் பெருவாழ்வு அவனுக்கே சொந்தம். ஆன்மிக வாழ்வு வாழ்பவன் ஆசைக்கு அடிமைப்படுவதில்லை. சிற்றியல்பையும், சிற்றுணர்வையும் கடந்து பேரியல்பையும் பேருணர்வையும் பெறும் தெய்வீக மனிதனாக ஆன்மிக வாழ்வு வாழ்பவன் மாறி அமைகின்றான்.

எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடுகின்றன. உண்மையான இன்பத்தைப் பெறாது போலி இன்பத்தைப் பெற்று அதுதான் இன்பம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் ஆன்மிக இன்பமேயாகும். ஆன்மிக வாழ்வின் மூலம்தான் உண்மையான பேரின்பத்தைப் பெற முடியும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ஜடசக்தியை நன்கு பயன்படுத்திப் பிரபஞ்ச வாழ்வை வசதி நிறைந்த வாழ்வாக இன்று அமைத்துக் கொண்டுள்ளார்கள். இதில் மேநாட்டினர் சிறந்து விளங்குகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சியடைந்துள்ள மேல்நாட்டினர் நிம்மதியான வாழ்வு எங்கு கிடைக்கும் என அலைந்து திரிகின்றனர். நிம்மதியான வாழ்வுக்காக இந்தியாவை நாடி வருகின்றனர். ஆன்மிகத்தின் மூலம்தான் சாந்தியையும், நிம்மதியையும் பெற முடியும் என்பதை மிகப் பழங்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

மாணாக்கர்: 4. ஆத்மா, மெய்யறிவு, ஆன்மிகம் இவற்றிற்குரிய விளக்கம் யாது?

ஆசிரியர் 04: பச்சைநிறக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்ப்பவனுக்கு எல்லாப் பொருள்களும் பச்சையாகத் தோன்றும். சிவப்புநிறக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்ப்பவனுக்கு எல்லாம் சிவப்பு நிறமாகத் தோன்றும். கண்ணாடியினுடைய வர்ணத்திற்கு ஏற்பப் பொருள்களிடத்து வர்ணத்தைக் காண்கின்றான். உண்மையில் இவன் காண்கின்ற வர்ணம் இவன் அணிந்துள்ள கண்ணாடியில் இருக்கிறதே தவிர இவன் காண்கின்ற பொருள்களிடத்து இல்லை. ஆனால் வர்ணக் கண்ணாடியை அணிந்திருப்பவன் தான் காண்கின்ற வர்ணம் பொருள்களிடத்து இருப்பதாக உணர்கின்றான். அணிந்திருக்கின்ற வர்ணக் கண்ணாடியை எடுத்துவிட்டு நிறமற்ற கண்ணாடியை அணிவானானால் பொருள்களிடத்து நிறத்தைக் காணமாட்டான். மனம் என்னும் கண்ணாடியைக் கொண்டுதான் நாம் உலகைக் காண்கின்றோம். ஆகையால் மனத்திலுள்ள உபாதிகளுக்கு ஏற்பப் பொருள்கள் நமக்குக் காட்சி தருகின்றன. மனிதன் என்னும் உபாதியை மனதிலிருந்து அகற்றிவிட்டால் நாம் மனிதனைக் காணமாட்டோம். ஆணாகத் தென்படுவதும், பெண்ணாகத் தென்படுவதும் ஒரே பொருள். இன்னும் பெண்ணிடத்து மனம் பல வேற்றுமைகளைக் காண்கிறது. ஒரு பெண்ணை ஒரு மனம் மனைவியாகக் காண்கிறது. அதே பெண்ணை மற்றொரு மனம் தாயாகக் காண்கிறது. அதே பெண்ணை மற்றொரு மனம் மகளாகக் காண்கிறது. ஓர் ஆணை ஒரு மனம் கணவனாகக் காண்கிறது. அதே ஆணை மற்றொரு மனம் தந்தையாகக் காண்கிறது. அதே ஆணை மற்றொரு மனம் மகனாகக் காண்கிறது. இத்தனை காட்சிகளும் மனதிலுள்ள உபாதிகளேயாம். மனதில் உள்ள உபாதிகளை அகற்றும்பொழுது இக்காட்சிகள் எல்லாம் மறைந்துபோய்விடும். அப்பொழுது உலகில் ஒரே ஒரு பொருளைத்தான் காண்கின்றோம். அந்தப் பொருளுக்குத்தான் ஆத்மா என்று பெயர். இந்த ஆத்மாதான் உண்மையில் இருக்கிறது. இந்த ஆத்மாவை அறிகின்ற அறிவுக்குத்தான் மெய்யறிவு என்று பெயர்.

மனதில் உள்ள உபாதிகளை அகற்றுவதற்குரிய ஒழுக்கமான வாழ்வும் விவேக வைராக்கியத்துடன் கூடிய வாழ்வும் ஆன்மிகம் எனப்படுகிறது. ஆத்மாவை அறிவதற்குரிய ஆன்மிக வாழ்விலிருந்து ஆத்மாவை அறியும் மெய்யறிவு உண்டாகிறது.

மாணாக்கர்:   5. ஆத்மாக்களின் இயக்கம் என்றால் என்ன?

ஆசிரியர் 05: இதற்கு பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இனப்பெருக்கம் செய்தல், மூச்சுவிடுதல், நடத்தல், சாப்பிடுதல், என நீண்ட பட்டியல் உண்டு. ஒரு உயிரினத்தில் இந்த செயல்கள் அனைத்தும் மொத்தமாக நின்றுவிட்டால் அல்லது அனைத்தையும் மொத்தமாக நிறுத்திவிட்டால் அது இறந்துவிட்டதாக கூறுகிறோம். (இங்கே சிந்திப்பது, கேட்பது, வலி போன்றவற்றை உணர்வது என்ற செயல்களை மட்டும் புறக்கணியுங்கள். இது பற்றி பிறகு பார்ப்போம்.)  இறந்த பின்னான ஆத்மா பற்றி மதங்களின் பார்வையும், அறிவியலின் பார்வையும் வேறுவேறாக உள்ளது. ஆத்மா உடலில் இருந்து பிரிந்து தனி ஒரு பொருளாக சென்றுவிடுகிறது என்று மதங்களும், இறந்துவிட்ட பிறகு அதற்குமேல் ஒன்றும் இல்லை; உடலின் சத்துக்கள் மண்ணோடு மண்ணாக கலந்துவிடுகிறது என்று அறிவியலும் கூறுகிறது.

மாணாக்கர்:   6. ஆத்மா எங்கிருக்கிறது?

ஆசிரியர் 06: உலகில் தத்துவங்கள் தோன்றிய நாட்களிலிருந்து இன்றுவரை ஆத்மா பொதுவாக இதயத்தில் இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இதயம் என்ற உறுப்பு பற்றி தெளிவான அறிவு பழங்காலத்தில் இல்லாதிருந்ததால் நெஞ்சுக்கூட்டிற்குள் இருப்பதாக நம்பப்பட்டுவந்தது. எல்லா மதக்கோட்பாடும் இதற்கு விதி விலக்கல்ல. அதுமட்டுமல்ல, ஆத்மாவின் மையம் இதயம் என்பதுபோல, இந்த இதயமே சிந்தனைக்கான (அறிவுக்கான) உறுப்பாகவும் கூறுகின்றன.

ஆத்மா பிராணவாயுவில் இருப்பதாக அத்வைதம் கூறினாலும் அது தங்கி இருக்குமிடம் நெஞ்சுக்கூட்டிலுள்ள இதயத்து அருகில் ஒரு வெற்றிடத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக கூறுகிறது.

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்“. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது, நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில். நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண், காது, மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு, அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லலாடஸ்தானம், ஆத்மஸ்தானம், பத்தாம் வாசல், கடைக் கண் என்று சித்தர்கள் கூறுவர்.

மாணாக்கர்:   7. ஆத்மா என்பது எது?

ஆசிரியர் 07: ஆத்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது. அதன் சக்தி அதாவது ஆற்றல் கோடி சூரிய பிரகாசம் உடையது. அந்த ஆத்மாவில் அமுதம் என்னும் அருள் நிறைந்து உள்ளது.

ஆத்மாவை ஆத்மாகாயத்தில் இருந்து இறைவன் அனுப்பி வைக்கும் முன், மீண்டும் திரும்பி வருவதற்காக அருளைப் பதிய வைத்துதான் அனுப்பி வைக்கின்றார்.

இந்த பூத உலகத்திற்கு வந்ததும் ஆத்மா தனித்து. வாழாது வாழ முடியாது. உயிரும், உடம்பும் எடுத்துதான் வாழ வேண்டும் என்பது இறைவனின் சட்டமாகும்.

ஆத்மாவில் இருந்துதான் உயிர் உண்டாகிறது. இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொதுவானதாகும். ஆத்மா பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில், மனித தேகம் கிடைத்து இருக்கின்றது. அதனால்தான் “அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” என்றார்கள் நம்முடைய பெரியவர்கள்.  உயர்ந்த அறிவு படைத்த மனித தேகம் என்கின்றார்.

ஆத்மா மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால், மனித தேகத்தில் புருவமத்தியில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேலே புருவ மத்தியின் உள்ளே இயங்கிக் கொண்டு உள்ளது.

மாணாக்கர்:   8. ஆத்மாவின் உண்மை வடிவம் என்ன?

ஆசிரியர் 08: ஆத்மா வேறு, பிரபஞ்சம் வேறு. பிரபஞ்சம் அழியும் பாங்குடையது. ஆத்மா அழியாதது. வீடும், வீட்டில் குடியிருக்கும் மனிதனும் வெவ்வேறானவர்கள். குடியிருக்கும் மனிதன் தன்னையும். தான் குடியிருக்கும் வீட்டையும் அறியவருகிறான். அப்படி அறியும் பாங்குடையது ஆத்மா. அது அழியாப் பொருள். ஆத்மா ஆனந்த சொரூபம். நாம் ஆத்மா என்பதற்கு அத்தாட்சி நாமே. உடலோ ஜடப்பொருள். தூங்கும்பொழுது உடல் தன்னைத்தான் அறிந்துகொள்ளுதல் இல்லை. குடியிருப்பதற்குத் தகுதியற்ற உடலை ஜீவாத்மா புறக்கணிக்கிறது. அப்பொழுது அது வெறும் சடலம். ஆகவே ஆத்மாவின் வடிவம் ஸத் சித் ஆனந்தமாம். ஜடப்பொருள் ஸத் ஆகாது. ஆகையினால் அதனிடத்து அறிவோ ஆனந்தமோ இல்லை. நான் இருக்கிறேன் என்பதை எது அறிகிறதோ அது ஆத்மா. ஆத்மாவானது ஆணன்று, பெண்ணன்று, அலியன்று. இந்த வேறுபாடுகளனைத்தும் உடலுக்குரியவைகள். உடலைத் தான் என்று கருதுவது அக்ஞானம். விசாரித்துப் பார்த்து ஆத்மா வேறு, பிரகிருதியின் கூறாயிருக்கிற உடல் வேறு எனப் பாகுபடுத்துவது மெய்யறிவு. இந்த அறிவுக்கேற்ப வாழ்வது ஆத்மசாதனமாகிறது.

மாணாக்கர்:   9. இல்லறத்தில் இருந்த வண்ணம் ஆத்மதியானத்தை பயிலலாம?

ஆசிரியர் 09: தாவரத்தில் வெளிச்சசக்தி ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக முடிவடைகிறது. அதுபோல் எல்லா சீவராசிகளிலும், அனேகவித நிறமுடைய ரத்தஉணர்ச்சியாக, வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனிதஉடம்பில் 13 முதல் 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்தநாடிகள் இருக்கும் இடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கின்றது. விந்துவின் உள்ளும், புறமும் இருக்கும் சக்தியே குண்டலினி~ என்பதாகும்.

குருவால், கருவால், ஒழுக்கத்தால், உயர்வால், பரம்பரை வாசனையின் அந்தஸ்த்தால், தன்னைத்தான் அறியவேண்டும் என்றோ, பரமாத்மாவை அடையவேண்டும் என்றோ எண்ணுகின்ற வீரனுக்கு குண்டலினிசக்தி மிகமிக பயன்படுகின்றது.

மரணமில்லா பெருவாழ்வு வாழ உள்ளுணர்வு மிகமிக அவசியம். உணர்விருந்தால் மரணபயமில்லை. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதனை பலவிதமாக சொல்வர். இதில் அடங்கியிருக்கும் கருவின்நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையை ஒத்திருக்கிறது. இதை மேல்நோக்கி கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.

இந்த அரியபொக்கிஷமாகிய குண்டலினி சக்தியினை பழங்காலத்தில் மகிரிசிகளும், யோகிகளும் தியானித்து வாழ்வின் பெரும் நோக்கமாகிய வீடு பேற்றினை அடைந்தார்கள். இம்மாபெரும் யோகமுறையினை அவர்கள் பெரும் பொக்கிஷமாக மதித்து மிக மிக ரகசியமாக பாதுகாத்து வந்தனர். ஆதலினால் இந்த அரிய குண்டலினியோகமானது மனிதசமூகத்துக்கு தெரியாமல் மறைந்துவிட்டது.

ஆத்மதியானம் மிக எளிமைப்படுத்தி மக்கள் அனைவரும் இந்த யோகத்தினை பயின்று, அவரவர் குடும்பம், நட்பு, தொழில் இவைகளுடனே வாழ்வாங்கு வாழ்ந்து வீடு பேறடையும் வண்ணம் போதித்தருளியுள்ளார்கள்.

 இந்த ஆத்மதியானத்தை மிக எளியமுறையில் போதித்தருள்கிறார்கள். ஆண், பெண், சாதி, மதம், இனம், மொழி, ஏழை, தனவந்தர் போன்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி மனிதகுலம் அனைவரும் இவ்வுபதேசத்தினைப் பெற்று பேரானந்தமாக வாழ்வாங்கு வாழலாம்.

இந்த உபதேசம் பெற்றுத் தொடர்ச்சியாகப் பயின்றுவரும் சிஷ்யர்கள், தொல்லைகளெல்லாம் சிறிது சிறிதாக விலகி மறைவதை உணர்வதுடன், தேக ஆரோக்கியம் வலிமை பெறுவதையும், மனஅமைதியுடன் அறிவு தெளிவடைவதையும் உணரலாம். இவ்தியானம் அவரவர் தொழில், நட்பு, சுற்றம் இவைகளுடன் இல்லறத்தில் இருந்த வண்ணமே பயிலலாம்.

மாணாக்கர்:   9. ஆத்மாவிற்கான இயல்பு யாது?

ஆசிரியர் 09: ஜட இயற்கையில் கட்டுண்டிருக்கும்போது, ஆத்மா தன்னை உடலுடன் தவறாக அடையாளப்படுத்திக் கொண்டு, உடலின் அடிப்படையில் செயற்கையான இயல்புகளால் கடைப்பிடிக்கின்றான். ஆனால் நான் ஏற்கனவே விளக்கியவாறு, ஒருவரின் உண்மையான அடையாளம், “நான் இயல்பான ஆத்மா” என்பதே. இயல்பான அறிவின் இத்தளத்திற்கு வரும்போது, நம்முடைய முக்கியமான இயல்பினை நம்மால் தெளிவாக அறிய முடியும். .

.“ஒருவரின் முக்கியமான இயல்புகளை” என்று அறிய வேண்டும். எல்லாவற்றிற்கும் குறிப்பிட்ட குணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, மிளகாயை எடுத்துக் கொண்டால், காரமான சுவையைத் தருவதே அதன் இயல்பான குணம். மிளகாய் வாங்குவதற்காக நாம் கடைத்தெருவிற்குச் செல்லும்போது, அஃது எவ்வளவு காரமாக உள்ளது என்பதை சோதிக்கின்றோம். அது காரமாக இல்லாவிடில் நிராகரிக்கின்றோம். எனவே, மிளகாயின் இயல்பு, மிகவும் காரமாக இருக்க வேண்டும் என்பதே. அதுபோலவே, சர்க்கரையின் இயல்பு, இனிப்பாக இருக்க வேண்டும் என்பதே. ஆத்மாவிற்கான இயல்பு ஆனந்தம்.

மாணாக்கர்:   10. நான் யார்?

ஆசிரியர் 10: ஆத்மதான் சுவை முதல் உடல் இச்சை என அத்தனை உணர்வுகளையும், உடலில் உணர்ச்சியாக விரிந்து அனுபவித்து கொண்டு இருக்கிறது.

மாயையான மனம் எனும் “நான்” எனும் அறியாமை, அனைத்தையும் தானே அனுபவிப்பதாக கற்பனை செய்து கொண்டு, கழுதை போல் யாரோ அனுபவித்த சுக துக்கங்களுக்கான கர்ம வினை, எனும் பொதிகளைச் சுமக்கிறது. அதுவே பிறவிகளைத் தொடர்கதையாக்குகிறது.

ஆத்மாவே உண்மை. நான் என்பது என்றும் இல்லை.

மாணாக்கர்:  11. நான் யார்? …என் பிறவி நோக்கம் என்ன?

ஆசிரியர் 11: இந்த தீவிர ஆராய்ச்சியில் எனக்கு புலப்பட்டதை உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன்…

உடல், உயிர், மனம், அறிவு இவற்றுள் நான் யார்?

இந்த உடல் என்னால் ஆக்கப்பட்டது அல்ல, அது என் கட்டுப்பாட்டிலும், என் இஷ்டப்படியும் இயங்கவில்லை. அது நான் அல்ல.

மனம் அதுவும் எனக்கு கட்டுப்படாத தன்மை கொண்டதாக உள்ளது, அதுவும் நானாக இருக்க முடியாது.

அறிவு அது உயிரின் சொரூபமாக இருப்பதை உணர்ந்தேன். அறிவும் உயிரும் கலந்த ஒன்றே நான் என உணர்ந்தேன், ஓ… இதுவே ஞான நிலையோ?

மனமும் உயிரும் கலந்த நிலை கர்மம் உடைய ஆத்மா என்றுணர்ந்தேன். இங்கே நிலைத்தால் பிறவிகள் தொடரும் என அறிந்து அதிலிருந்து மீண்டேன்.

இவை இரண்டில் ஆத்மஞான நிலை நிரந்தரம் என்றறிந்து அதையே நான் என்று பொருத்தி அங்கேயே கவனத்தை நிறுத்தி ஆத்மாவாக நிலை கொண்டென்.

கூண்டோடு கிளி பறப்பது போல் உடலோடு உயிர் பறக்க சித்தம் கொண்டு உழைக்கிறேன். சத்தியமாக வெற்றி ஆத்மாவின் கையில்…..

மாணாக்கர்:   12. வினை அல்லது கர்மம் என்றால் என்ன?

ஆசிரியர் 12: நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே. அதாவது, இறைவனின் அம்சமே. நமது ஆத்மா இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும், மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர் ஆரோக்கியமாகவும் மற்றொருவர் ஊனமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது ஏன்? நம் பிறப்பை, இறப்பை நிர்ணயிப்பது எது? இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு மூன் பற்பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே தான். அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்கச் செய்கிறது. இதுவே இறைநியதி. எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் ஆத்மவோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.

இப்பிராரத்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும். பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவம் – விதி – ஆகாமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினைப் பயன்கள் மட்டுமே.

மாணாக்கர்:   13. வினையை – விதியை மதியால் வெல்வது எப்படி?

ஆசிரியர் 13: நஞ்சினை வென்றிடும் இருளினை நீக்கிப் பொருளினைக் காணச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளைப் பெறவேண்டும் என்று இச்சைப்படுங்கள்.

அந்த இயல்புணர்வின் தன்மை உங்கள் உயிரிலே மோதச் செய்யுங்கள். இந்த உணர்ச்சிகளை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள். உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியி்னைச் சேர்ப்பியுங்கள்.

தீமையைப் பிளக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். இயல்புணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள்.

குருவிடம் தீட்சை பெற்று நம் இயல்புணர்வை பெற்று இந்த இயல்புணர்வில் நம் மனதை இருத்தி தவம் செய்தால் நம் இயல்புணர்வை ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும்.

ஆகவே, இயல்புணர்வுடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.

மாணாக்கர்:  14. விதி என்றால் என்ன? விதியை எப்படி வெல்வது?

ஆசிரியர் 14: நம் அகத்தில் உறையும் சோதி மயமான ஆத்மாவின் மீது மூடியிருக்கும் மனத் திரையில் பதிவாகி இருக்கும் கர்ம வினை என்னும் கருமையின் நிழல் தான் இந்த மாயையான சரீரம் மற்றும் விதி. இந்த சரீரம் விதி வழியே இயக்கம் கொள்கிறது.

சம்ஸ்காரம் என்னும் பதிவுகளின் வரிசை கிரமப் படி நம் அன்றாட நிகழ்வுகள் நடக்கின்றன. மனதின் வழியே விதியின் வழி.

விதியை நம் மதி என்னும் ஞானத்தால் மட்டுமே வெல்ல முடியும்.

சரி!! விதியை எப்படி வெல்வது.?????

நம் ஆத்மா என்னும் அகக் கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள மாயத் திரையை நீக்க வேண்டும்.

அதற்கு நாம் அந்தர் முகமாக அக சோதி தரிசனம் காண முயல வேண்டும். ஆத்மபிராத்தனை மட்டுமே அதற்கான வழி..

மனதின் பிடியில் இருந்து விலகி உள்முகமாக ஆத்மாவை நோக்க வேண்டும். படிப் படியாக மனம் அற்ற நிலை ஏகும்போது மாயையான விதி என்னும் பதிவின் நிழல் அற்று போகும்போது விதி என ஒன்று இராது.

ஆத்மா ஞான வழி ஒன்றே அனைத்தையும் கடந்த வழி.. முக்திக்கு மதம் கொண்ட மதம் அவசியமில்லை. மெய்க் குருமார்களான நம் சித்தர் வழியே போதும்.

விதியை வெல்ல ஒரு எளிய மார்க்கம். அகத்தியன் தலைமையிலான நம் சித்தர்களின் மார்க்கம். துருவரின் கருணை மார்க்கம்…ஆத்மாவே கடவுள்…..

மாணாக்கர்:  15. உயிராக வாழும் ஆத்மா வாழ்வு எப்படி?

ஆசிரியர் 15: உண்ணும் உணவை ஆத்மாதான் சுவைக்கிறது. ஆத்மா கவனத்தில் ஆலகால விடத்தை உண்டால் கூட தொண்டை குழிக்கு அப்பால் நம் ஆத்மசக்தி அதனை அமிர்தமாக மாற்றுகிறது.

அதனால் உண்ணும் எந்த உணவையும் ஆத்மாதான் உண்ணுகிறது என்னும் ஆத்மா நினைவோடு உண்ணல் வேண்டும்.

இப்படி உண்டு வந்தால் ஆத்மசக்தி கூடும். அப்போது உடலில் உள்ள பல நோய்கள் விடை பெறும். உடலைப் பல படுத்துதலை விட ஆத்மாவை பலப் படுத்த வேண்டும்.

அது கவனத்தால் மட்டுமே முடியும். உண்ணும் உணவு, உறங்கும் உறக்கம், என அனைத்து காரியங்களையும் ஆத்மாதான் செய்கிறது என்னும் கவனத்தில் செய்ய வேண்டும். உயிராக படுத்து ஆத்மாவாக எழல் வேண்டும். அதுவே கவன சித்தி…ஆத்மாவே கடவுள்.

மாணாக்கர்:  16. மாயை என்றால் என்ன?

ஆசிரியர் 16: உலகில் உண்மைக் கடவுளான ஆத்மாவை உணராத, அறியாத குழப்பமே மாயை என்பது……

பந்த பாசம் என்னும் சேற்றில் ஆத்மா விதையாக விழுந்து சரீரமாக மலர்ந்தது.

இப்போது சரீரத்தை ஆத்மாவில் விதையாக விதைத்து கவனித்து வர, உடல் ஆத்மாவாக மலரும்….

இன்பத்தின் எல்லையில் மனிதன் கடவுளை மறந்திடுவான்.

துன்பத்தின் எல்லையில் கடவுள் மனிதனை மறந்திடுவான்.

எந்த நிலையிலும் கடவுளான ஆத்மாவை மறவாத நிலை கொள்க எம்மக்களே……

ஒரு தாவரத்தின் விதையை பூமியில் விதைத்தால் விதை முளைப்பது இல்லை.

விதையில் உள்ள ஆத்மாதான் முளைக்கிறது. ஆத்மாவே கடவுள்….

 

மாணாக்கர்: 17. மனித வாழ்க்கையின் இலட்சியம் என்ன?

ஆசிரியர் 17: மறைமுகமாகச் சொன்னாலும், வெளிப்படையாகச் சொன்னாலும், சுருக்கமாகச் சொன்னாலும், விளக்கமாகச் சொன்னாலும், நேரடியாகச் சொன்னாலும், சுற்றி வளைத்து சொன்னாலும் மனித வாழ்க்கையின் இலட்சியம் ஆத்மஞானம் பெறுவதும், உலகிற்கு நன்மை செய்வதுமே ஆகும்.

மாணாக்கர்: 18. ஒன்றா, பலவா பிறப்புக்கள்?

ஆசிரியர் 18: இயற்கையின் ஒரே தடவை மட்டும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஒன்றுமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாப் பொருள்களிடத்தும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. ஒரு தடவை மழையாக விழுந்த நீர் பல தடவை மழையாக விழவல்லது. அங்ஙனம் நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!

ஜீவன் என்பது ஓர் ஆத்மா, அதற்கு உடலங்கள் மாறி மாறி அமைவது அதற்குப் புதிய, புதிய அனுபவங்களைத் தருதற்பொருட்டேயாம். ஒரே தடவை ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகும் மாணாக்கள் அதிகம் கற்க முடியாது. கல்வி பூர்த்தியாகும் வரையில் திரும்பத், திரும்ப அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயற்கையின் பேரமைப்பாகிறது.

ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு என்பதாக முடியும். ஒரு பிறப்போடு அழிந்துபோகும் ஆத்மா வாழ்ந்திருக்கும் போதும் நன்மைக்காகப் பாடுபட வேண்டியதில்லை என்று ஏற்படும். மனிதனுக்கு ஒரே ஜன்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ சுவர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார். என்பதும் பொருந்தாது. ஒரு ஜன்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையாது அளிக்கிறது. மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும் பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜன்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூரணமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும், அனுபவத்துக்கும் பொருந்தும்.

மாணாக்கர்: 19. உடம்பானது ஆத்மா எடுத்து வந்ததா?

ஆசிரியர் 19: அல்லது ஆத்மாவானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா?

உடம்புதான் ஆத்மா எடுத்ததென்றால் உயிர் ஆத்மா வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது. உடம்பில் உள்ள ஆத்மாக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும், உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆத்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, ஆத்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக ஆத்மா இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலே இருந்து உணர்வது ஞானம்.

மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே.

இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆறாதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து ஒன்பது வாசல் கொண்ட உடலுயிராக வளர்ந்து இப்பூமியில் வெளிவரும். அப்படிவரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் ஆத்மாவே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.

ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது.

அந்த மனத்தை குவித்து நம்மில் நினைவால் நிறுத்தி ஆத்மாவை நினைந்து தியானம் செய்ய, மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும். பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் ஆத்ம சோதியை தனக்குள்ளே கண்டு ஆத்மா கடவுலை எப்போதும் கருத்தில் வைத்து தியானியுங்கள். இறவாநிலை பெற காரணமாகும்.

இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் உயிர் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல் ஆத்மா கடவுள் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.

மாடமாளிகைகள் கட்டி, மாடு கன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும், உயிர் போனதை உணர்ந்தும் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றீர்கள். அவ்வுடலில் உயிராய் நின்று ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இறவா நிலைபெற்று இறைவனை சேர இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் செய்யுங்கள்.

மாணாக்கர்: 20. ஆன்மீகத்திலுள்ள ஆயிரக்கணக்கான பாதைகளில் எங்கள் பாதை எது?

ஆசிரியர் 20: உலகத்தில் உயிரினங்கள் தோன்றி பல்வேறு பரிணாமங்களை அடைந்து அது மனிதன் வரை உருப்பெறுகிறது. அதனால் ஒரு ஆன்மாவுக்கு பல்வேறு அனுபவங்கள் ஏற்படுகிறது. அதவாது பசி, தன்னை காப்பாற்றிக்கொள்ளுதல், உணவை வேட்டை ஆடுவது, மழை-வெயில் இவற்றிலிருந்து தப்பிக்க இருப்பிடம் அமைத்துக்கொள்வது, மேலும் உயிர் உற்பத்தி, வாழ்க்கைமுறை, இன்பம்-துன்பம், சமூகம், கல்வி, ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனுபவங்களை ஒரு ஆன்மா ஒரு அணு முதல் மனிதன் வரை அதாவது தான் வாழ்ந்துகொண்டு இருக்கும்வரை பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது. மேலும் இந்த அனுபவங்களைக் கொண்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான்.

இப்படியாக ஒரு ஆத்மா பல ஜீவராசிகளில் பயணம் செய்து மனிதனாக உருவாகும் போது அது பிரம்மத்தை முழுமையாக அறிய ஆரம்பிக்கிறது. அப்படி ஆரம்பிக்கும் போது, அந்த பிரமத்தின் தேடலில் பல அனுபவங்கள் ஏற்படுகிறது. அதை அந்த ஆத்மா யோகத்திற்க்கு பயன் படுத்துகிறது. அந்த பிரம்ம அனுபவத்தில் முழுமை அடையவில்லை என்றால் அந்த ஆத்மா மீண்டும் மனிதனாக பிறவி எடுத்து தன் பயணத்தை தொடர்கிறது. இப்படி பல பிறவிகள் அதாவது அதன் வாழ்க்கை, குடும்ப சூழ்நிலை, தொழில், கல்வி போன்ற பலவகையான அனுபவங்களின் அடிப்படையில் அது ஆன்மீகத்தின் முழுமைநிலையான முக்தி நோக்கி பயணிக்கிறது. அப்படி பயணிக்கும் போது ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை இந்த உலகிற்கு வாய்வழியாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்து செல்கிறது. அந்த ஆன்மா தான் கடந்து வந்த பாதை, மேலும் தான் கடக்க வேண்டிய நிலை இரண்டையும் சேர்த்து தனது அனுபவமாக அந்த ஆத்மா விட்டுச் செல்கிறது. அந்த அனுபவங்களை பல ஆத்மாக்கள் பின்பற்றுகிறது.

அந்த அனுபவங்களை பின்பற்றும் ஆத்மாக்கள் அது தான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும், தனக்குள் இருக்கும் பதிவுகளையும் கொண்டு புதிய ஆன்மீக பாதையை வகுக்கிறது. இப்படி ஆன்மீக பாதையை கடைப்பிடிக்கும் ஆன்மாக்கள் தன் தகுதிக்கும், அனுபவத்திற்க்கும் ஏற்ப அதனுடைய நிலைகள் நின்றுவிடுகிறது. அதிலே, சில ஆத்மாக்கள் முக்தி வரை தன்னுடைய அனுபவங்களை இந்த உலகிற்கு வெளிப்படுத்துகிறது. ஆனாலும் சில முக்தியடைந்த ஆத்மாக்கள், அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் பண்பாடு, கலாசாரம், குணம் இவைகளுக்கேற்ப யோகத்தை முழுமையாக கூறாமல் சில வழிமுறைகளை மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

இதற்கு உதாரணம் என்னவென்றால் ஒரு மலையின் சிகரத்திற்கு பயணம் செய்யும் போது வழியில் பல இயற்கை காட்சிகளை ரசித்து செல்கிறோம். ஆனால பயணத்தின் முடிவு சிகரத்தின் உச்சியை அடைவது தான். மலையில் ஏறும்பொது சிலர் சிகரத்தின் உச்சியை அடைய முடியவில்லை என்றால், அவர்கள் தான் அடைந்த இடத்திலிருந்து கீழே பார்த்து நாம் இவ்வளவு தூரம் வரை வந்திருக்கிறோம், இதுபோதும் என்று நினைப்பார்கள். மேலும், அங்கிருந்தபடியே அங்கிருக்கும் நிலைகளை ரசிக்க தொடங்கி அங்கேயே நின்று விடுவார்கள். இப்படித்தான் பல ஆத்மாக்கள் தனது முழுமை நிலையிலிருந்து கீழ்நிலை வரைக்கும் தனது ஆன்மீக அனுபவங்களை தான் அடைந்தவரை தெரிவித்துவிட்டு போயிருக்கிறார்கள். இப்படி தெரிவித்து போனவர்களில் எங்கள் குரு முக்தி நிலையை அடைந்து தன்னை பின்பற்றும் ஆத்மாக்களும் முக்தி நிலையை அடைய தன்னுடைய அனுபவங்களை கூறியதுடன், அதற்கான  தியானங்களையும் தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆகவே எங்களுடைய இயக்கத்தின் பாதை முக்தி மட்டுமே, மற்ற வேறு எதிலும் கவனம் செலுத்துவது கிடையாது. முக்தி மட்டுமே எங்கள் குருவின் (இயக்கத்தின்) பாதையாகும்.

உடல், மனம், உயிர் இவற்றை ஒளிநிலை அடையச்செய்து அவற்றை ஆத்மாவில் கலந்து, பரமாத்ம ஒளியை அடைவதுதான் முக்தியாகும். இதுதான் எங்கள் பாதையாகும்.

மாணாக்கர்:   21. பிறப்புக்கு முன் எந்த நிலையில் இருந்தாய்?

உன் உடல் எப்படி உருவானது?

இறந்த பின்உன்நிலை என்ன?

ஆசிரியர் 21: இம்மூன்றையும் அறிந்தவன் உன் ஆத்மா ஒன்றே. நீ எதன் மீது கவனமாக இருக்கிறாயோ அதுவாகவே மாறிப் போவாய். அதனால், ஆத்மாமீதே கவனம் கொண்டு வாழும்போது உடல் கவனம் அற்று ஆத்மா கவனம் கூடி ஆத்மாவாகவே மாறிடலாம். ஆத்ம நிலையே உன்னதமான முக்தி நிலை. அதுவே சாகாநிலை. சாகாகலை எனும் ஆத்மா கலை. ஆத்மா கடவுள்…

மாணாக்கர்:  22. நான் அதிர்ஷ்டசாலி ஆவதெப்படி?

ஆசிரியர் 22: மனம் எனும் மாயையின் பிடியில் சிக்கி இருக்கும் வரை விதியின் கையில் விளையாட்டு பதுமை ஆகி இறுதியில் மரணத்தின் பிடியில் வீழ்ந்து பிறவிகள் தொடர் கதையாகி முக்திக்கு நாதியற்று பிரேதாத்மாவாக அலையும் அவலம் நீங்க வேண்டுமானால் நீ அதிர்ஷ்டசாலியாக மாறவேண்டும். அது உன் கையில் தான் உள்ளது.

உன் உயர்ந்த அறிவைக் கொண்டு உன் கடவுள் உன் ஆத்மாதான் என உன் அறிவால் அங்கீகரித்து உன் ஆத்மாவின் நிழலான மனம் எனும் மாயையின் வழியில் செல்லாது அந்தர் முகமாக ஜோதி சொரூபமான உன் ஆத்மாவை உணர்ந்து லயித்து அதனிடம் சரணாகதி ஆகிவிட்டால் உன் விதி நீங்கி உன் வாழ்வு ஆனந்தமயமாகி அதன்(ஆத்மா) இஷ்டத்தில் அமைந்து நீயும் அதிர்ஷ்டசாலியாக ஆகி போவாய். ஆத்மாவின் எப்புறமும் ஆனந்தமயமே. உன் கடவுள் உனக்குள்ளே. நீ அதிர்ஷ்டசாலியாக ஆனால் நீதான் கடவுள்.

…முயன்று பார்க்கலாமே…

மாணாக்கர்:  23. நம் பிறவி எதற்காக……???????????????

ஆசிரியர் 23: சரீரம் வேண்டி நிராதரவாக அன்று இறை சபையில் நின்று கதறி அழுது இந்த பிறவியை எதற்காக யாசித்து பெற்றாய்.

வயிற்று பிழைப்புக்கு கல்வியோ ?

ஊயிர் வாழ அடிமை உத்தியோகமோ?

தினவெடுத்த வாலிப உடல் பசி தீர பெண்டோ?

குலம் வாழ மகனோ மகளோ?

மகனுக்கோர் வீடோ?

மகளுக்கோர் வீடோ?

அவர் வாழ மருமகனோ மருமகளோ?

பேர குழவிகளுக்கு கல்வியோ?

அவர்களுக்கும் திருமணமோ?

இப்படி உம் ஆசை நீண்டு கொண்டே போனால் அறுபது பிராயம் கடந்தபோதும் தீராத ஆசை?

கடுகவே எமன் வந்து அழைக்கும்போது சரீரம் உனை விட்டு நழுவும் பொது நீ எதை எல்லாம் லட்சியம் என்று நினைத்து உம் வாழ்வை வீனடித்தாயோ அவை யாவும் கனவாகி மறைந்தும், மறந்தும் போகும். அப்போது நீ அநாதை ஆகிப் போவாய்?

வாழும்போதே மேற்கண்ட அனைத்தையும் தேவைக்கு மட்டும் அடைந்து கொண்டே சுய நலமியாக உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமான உன் கடவுளை உன் ஆத்மாவை உன் உரிமையான மெய் வீடாம் முக்தி அடையும் வழியைத் தேடு.

தாமரை இலையும் நீரும் போல உலகில் வாழப் பழகு.

நீ சேர்க்கும் தர்மமே உம்மை மெய் லோகம் கொண்டு சேர்க்கும். உம் அழிக்க முடியாத சொத்து, அபகரிக்க முடியாத சொத்து உம் தர்மம் மட்டுமே .

அடாத வறுமையிலும் விடாது தர்மம் செய்யும் எண்ணம் கொள்….

மாணாக்கர்:  24. ஆத்மா வாழ்க்கை எப்படி?

ஆசிரியர் 24: நாம் உண்ணும் உணவை ஆத்மா தான் சுவைக்கிறது. உயிர் அற்ற உடலுக்கு சுவையினை உணர இயலாது.

தாம்பத்திய சுகம் என்பது இரு உடல்கள் இணைவது கிடையாது. இரு ஆத்மாகளின் உணர்ச்சி வழி வெளிப்பாடே புணர்ச்சி.

நம் ஒவ்வொரு அசைவையும் ஆத்மாவே நிகழ்த்துவது. இதை அறியாது மனம் நான் எனும் கர்வம் நிமித்தமாக ஆத்மாவின் செயல்கள் அனைத்தையும் தானே செய்ததாக கற்பனை செய்து கொண்டு அனைத்தையும் நம் கணக்கில் கர்மாவாக பதிவு செய்கிறது.

மனத்தின் இந்த பொய்யான கற்பனையை நாம் அறிவு ரீதியாக புரிந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அனைத்தையும் நீக்கி விடலாம். நமக்கு உண்மையின் புரிதல் மட்டுமே தேவை.

மனம் மட்டுமே மாற வேண்டும். உங்கள் வாழ்வு உங்கள் கையில். ஆத்மாவே கடவுள்.

மாணாக்கர்: 25. ஆத்மாவே உன்னையே தியானித்து, ஆத்மாவேடு வாழ்பவர் எப்படிசாவார்?

ஆசிரியர் 25: என்று எளிமையாக நீ கேட்ட கேள்வியில் என் ஜென்மமே சுருங்கிப் போனதை நீ அறியாயோ? நீமட்டுமே என்னுள் இருந்து என் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறாய். உனையன்றி எனக்கு உறவேது?, உடலேது? பேச்சேது? மூச்சேது? ஒரு கணமும் உன்னை நீங்கி வாழ்வறியேன்.

ஆத்மாவை மறந்தவன் அப்படி செத்து போவதே நீதி என்று மரணத்தை நியாயபடுத்திய காவலனே, ஆத்மாவுடன் கலக்கும் கல்வியை இவ்வுலகில் விலை போக அருள்வாய், கடவுளே! என்ன விலை இருக்குமோ என்று தயக்கத்துடன் ஏழை நான் வினவ? அதற்கு நீ, கேட்டவர்க்கு கேட்ட விலை என்றாய். என் தவறான கேள்விக்கு கூட, சரியான பதிலுரைத்த பேரருளே! நின் கருணையை எண்ணி அழுதேவிட்டேன்.

என்னை படைத்தவன் கல்லாக நிற்பதையும், கல்லறைக்குள் கிடப்பதையும், என் அறிவு ஏற்க மறுக்கிறது. மதத்தின் பெயரால் கடவுளை மறைப்பது, நெருப்புக்கு சாம்பல் போர்வை போர்த்துவது போல் தான். உலகுக்கு ஆத்மாதான் கடவுள் எனும் உண்மை வெளிப்படும்போது மனித சமுதாயம் முழுதும், ஒரே மதமான வசப்படும்.

ஆத்மாவே கடவுள்….அஹம் பிரம்மாஸ்மி….

மாணாக்கர்:  26. மனிதனே உனக்கு விதியினிடம் இருக்கும் நம்பிக்கை ஏன் விதித்தவனிடம் இல்லை?

ஆசிரியர் 26: ஆத்மாவிடம் சரணடைதலே விதியிலிருந்து மீள ஒரே வழி. விதியும் அவனே, விதித்தவனும் அவனே… விதித்தவனை நம்பினார்க்கு விதியும் இல்லை வினையும் இல்லை…

உலகம் மாயையின் வசம் இருப்பதாக எண்ணுபவர்கள் மாயாவிகள், பூமியை விட்டு மறையக் கூடிய கலைகளை கற்று தெரிந்த மாய ஆவிகள்…

உண்மை கடவுளை உணராத குழப்பமே, உலகத்தில் மாயை என்று சொல்லப்படுகிறது. உண்மை கடவுளை மறைக்கும் சக்தியே மாயை. உண்மை கடவுளான ஆத்மாவை எந்த மாயையும் மறைக்க இயலாது.

ஆத்மாவிற்கு உறக்கமில்லை

ஆத்மாவிற்கு மரணமில்லை,

ஆத்மாவிற்கு நோய் இல்லை,

ஆத்மாவிற்கு பேதங்களில்லை…

மாணாக்கர்:   27. மனிதர்களின் இயல்பான சிந்தனை பற்றி விளக்கமாக கூற முடியுமா?

ஆசிரியர் 27: என்று வினவினாள் அறியாள். மனித இனத்தின் தோற்றம் மற்றும் மனித இனம் மருவிய தன்மை ஆகியாவற்றை ஆராயும் மனிதவியலாளர்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர், அதாவது மனிதர்களின் இயல்பான கோட்பாட்டின் ஆழத்தை முழுவதுமாக புரிந்துணர்வது சாத்தியமற்றது என்பதுவே அந்த முடிவு என்று பதிலளித்தார்.

மாணாக்கர்:  28. கர்மத்தில் ஞானம் இருக்கிறது; ஞானத்தில் கர்மம் இருக்கிறது. விளக்கம் என்ன?

ஆசிரியர் 28: ஐரோப்பாவிலிருந்த ஆதிமனிதர்களுக்குச் சமைப்பதைப் பற்றிய ஞானம் இல்லை. அவர்கள் பச்சை மாமிசத்தைப் புசித்து வந்தார்கள். ஒருதடவை அவர்கள் வளர்த்து வந்த பன்றிகள் இருந்த குடிசை தீப்பற்றிக்கொண்டது. அதில் தீய்ந்துபோய்ப் பன்றி ஒன்று மாண்டு போயிற்று. தீய்ந்துபோன மாமிசத்தைப் புசித்துப் பார்த்தார்கள். அதில் சுவை அதிகம் இருந்ததைக் கண்டார்கள். அந்த ஞானம் அவர்கள் கையாண்ட கர்மத்தின் விளைவாம். எப்பொழுதெல்லாம் சுவையான பன்றி மாமிசத்தைப் புசிக்க விரும்பினார்களோ அப்பொழுதெல்லாம் பன்றிகள் இருந்த குடிசைக்குத் தீ வைத்தார்கள். நாளடைவில் குடிசைகளுக்குத் தீ வைக்காமல் பன்றியைக் கொன்று தீயில் சுடலாம் என்ற ஞானம் அவர்களுக்கு வந்தது. இச்செயலில் கர்மத்தின் விளைவாக ஞானமும் பிறகு ஞானத்தைப் பயன்படுத்திக் கர்மத்தை முறையாகச் செய்யவும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். இக்கேள்விக்கு விடை இந்நிகழ்ச்சியில் இருக்கிறது.

தத்துவப்பூர்வமாகப் பார்க்குமிடத்துப் பிரபஞ்ச வாழ்வு கர்ம மயமானது. அந்தக் கர்மத்தைச் செய்துகொண்டு போகப் போக அதினின்று வருகின்ற அனுபவம் ஞானமாக வடிவெடுக்கிறது. பிறகு அந்த ஞானத்தைக் கையாண்டு வினையின் விளைவை மேன்மைப்படுத்தலாம்.

பௌதிக விஞ்ஞானிகள் கர்மத்தின் வாயிலாக இயற்கையில் அமைந்துள்ள மேலான கோட்பாடுகளை அறியவந்தார்கள். மேலான கோட்பாடு என்னும் ஞானத்தைப் பயன்படுத்திக் கர்மத்தை நன்கு சாதிக்கும் திறமை இப்போது உலகத்தவர்களுக்கிடையில் இருக்கிறது.

 

மாணாக்கர்:   29.

ஆசிரியர் 01: யோக சிகிச்சை முறையில் வாழ்க்கையைப் பற்றிய யோக முறையிலான பார்வைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இன்று உலகில் உள்ள பல விஞ்ஞானிகளும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும் அம்சம் எதுவென்றால் மனிதருக்கு ஏற்படும் நோய்களில் பெரும்பான்மையானவை இயல்பில் உடலும் உள்ளமும் சார்ந்தவையே ஆகும் என்பது தான். வாழ்க்கை குறித்த சரியான பார்வை இல்லாததின் விளைவாகத்தான் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை குறித்த நமது நம்பிக்கைகள், முடிவுகள், குறிக்கோள்கள், இலக்குகள் சரியாக இருந்தால் மற்றும் நமக்கு வாழ்க்கை குறித்த சரியான, சமநிலையான பார்வை இருந்தால், நமது வாழ்வாற்றல் சரியாகப் பயன்படுத்தப்படும். இதனால் உளவியல் உளைச்சல் மற்றும் கவலைகளில் இருந்து விடுபடுவதற்கான சரியான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட முடியும். மன அழுத்தம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக விரயம் ஆகும் பிராணாவை நாம் சரியான யோக முறையிலான வாழ்க்கை பற்றிய பார்வையை ஏற்றுக் கொள்வதன் மூலமாகத் தடுத்து விடலாம்.

எனவே, முழுமையான விஞ்ஞானமாக யோகாவைக் கருதினால், நோயறிதலுக்குப் பின்பு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என்றில்லாமல், அதனை ஒரு மாற்றமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை, கதிரிக்க சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை ஆகியவற்றின் பர்க்க விளைவுகளையும்கூடதாம் குறைத்துக்கொள்ள முடியும். அரவமற்ற ஆசனம், மெதுவான மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகப் பயிற்சிகள் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கும் சமநிலைபடுத்துவதற்கும் உதவுகின்றன.

மாணாக்கர்:   29. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் எப்போது செய்ய வேண்டும்.?

ஆசிரியர் 29: இதனால் உங்கள் வாழ்க்கையில் அன்பு, அருள், ஆனாந்தம் பேருவிர்சள்.

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி. அண்டம் என்பது பிரபஞ்சம்! பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்!!!

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று இயல்பார்ந்தக் சக்தி. இதைப் பயன்படுத்தி நமது இயல்பான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த இயல்பார்ந்த சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனதின் இயல்பார்ந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து முழு மனிதனாக வாழ முடியும்.

இந்த எளிய முறை இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானத்தைத் தினமும் காலையில், மாலையில் 6.30-6.51 வரை 21 நிமிடம்வரை நாம் தியானம் செய்து வரவேண்டும்.

மாணாக்கர்:   30. ஆத்மஞானம் என்றால் என்ன?

ஆசிரியர் 30: ஆத்மஞானம் என்பது நம்மைப்பற்றி நாமே அறிந்துகொள்வதாகும்.

ஆத்மஞானம் பெற முதல்படி, எல்லாவற்றையும் இயல்பாக பாவித்தல்.

இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி, சிரிப்பு-அழுகை முதலான அனைத்து

மனநிலைகளையும் சமமாக பாவித்தல் வேண்டும்.

மாணாக்கர்:    31. ஏன் இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் செய்ய வேண்டும்

           ஆசிரியர் 30: ஒவ்வொரு மனிதப் பிறவியும் தியானம் செய்ய வேண்டும். ஏனெனில் குறையாத இன்பமும் அழியாத அன்பும் அது எதிர்மறை உணர்ச்சியாக மல் இருக்க வேண்டும் என்பதுவும் மனித வாழ்க்கையின் இயல்பான தேடுதல் ஆகும்.

தியானம் என்பது அயலான ஒன்றா என்ன? இல்லவே இல்லை. பிறப்பதற்கு முன்னர் இரண்டு மாதங்கள் நீங்கள் தியனத்தில்தான் இருந்தீர்கள். உங்கள் தாயின் கருவில் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தீர்கள்! உங்கள் உணவைக் கூட சுவைக்க வில்லை, அது உங்களுக்கு உங்கள் வயிற்றுக்கு நேராகவே வழங்கப் பட்டது, இங்குமங்குமாக திரும்பியும் உதைத்தும் நீங்கள் திரவத்தில் மகிழ்வாக மிதந்து கொண்டிருந்தீர்கள். அதுவே தியானம். எதுவும் செய்ய வில்லை. அனைத்தும் உங்களுக்குச் செய்யப் பட்டது. எனவே அத்தகைய சுகமான நிலையை தேடுவது என்பது அனைத்து மனித உயிர்களுக்கும் இயல்பான நிலையே ஆகும்.

உங்களுக்கு அந்நிலை ஏன் தேவைப் படுகிறது தெரியுமா? ஏனெனில், நீங்கள் அந்த வசதியான சுகமான நிலை தியான நிலையில் ஓர் சமயத்தில் இருந்தீர்கள்.

தியானம் என்பது முற்றிலும் வசதியான நிலை. இந்த களேபரமான உலக வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னரே அனுபவித்துவிட்ட அந்த நிலைக்குத் திரும்பச் செல்ல விரும்புவது இயற்கைதான். ஏனெனில் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே மீழ்சுற்றுதான். அனைத்தும் மூலத்திற்கே செல்ல விரும்பும். அதுவே உலக இயல்பு.

இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து விடுகின்றன.மண்ணிற்குச் செல்கின்றன. இயற்கை அவற்றை மறு சுழற்சி செய்ய அதனுடைய சொந்த வழியினைப் பின்பற்றுகின்றது. இயற்கையான மறு சுழற்சி என்பது அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கும் எண்ணப் பதிவுகள் அனைத்தையும் விட்டு, இந்த உலகிற்கு வரும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அந்த மூலத்திற்கே செல்ல விரும்புவதுதான், அதுவே தியானம். புதுமையாகவும் உயிரோட்டத்துடனும் ஆவதே தியானம். உங்களது இயல்பான குணமாகிய சாந்த நிலைக்குத் திரும்புவதே தியானம். முழுமையான மகிழ்வும் ஆனந்தமுமே தியானம்.

எழுச்சியற்ற இன்பமே தியானம். பதட்டம் இல்லாத சிலிர்ப்பே தியானம். வெறுப்பில்லாத அன்பே தியானம்தியானம் ஆத்மாவின் உணவு. உணவிற்கு ஏங்குவது இயற்கையே. பசியுடன் இருக்கும்போது தன்னிச்சையாகவே எதையாவது உண்கின்றீர்கள்.தாகமாக இருந்தால், நீர் அருந்துகிறீர்கள். அதே போன்று, ஆத்மா தியானத்தை விரும்பி ஏங்குகிறது. அதுவே அனைவருக்கும் இயல்பான ஒன்றாகும்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட ஞானத்தினை வேண்டாதவர் இல்லை. அதை அறிவதில்லை அவ்வளவுதான். எங்கு உணவு கிடைப்பது இல்லையோ அங்கேயே அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம், அதுதான் பிரச்சினை.

 

கண்மூடி செய்யும் எந்த செயலும் பிராத்தனை ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் பிராத்தனை செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் ஆத்மாவில் – ஆத்மா மணியில் – ஆத்மாவின் மணி ஒளியில் மனதினை நிறுத்துவதே பிரார்த்தனையாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் ஆத்மாவில் இயல்புணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திளைத்து திளைத்து சும்மா இருக்க இருக்க இயல்புணர்வாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்ஙனம் பிரார்த்தனை தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது ஆத்மா ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு பிரார்த்தனை செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலாப் பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. இறைவனோடு அந்த பரமாத்மாவோடு, பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்.

மாணாக்கர்:  32. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் லட்சிய பயணம் எங்கே?

ஆசிரியர் 32:1. இயல்பின் சத்தியத்தை நிலை நிறுத்துவது.

 1. இயல்பின் தர்மத்தை நிலை நிறுத்துவது.

3.இயற்கை தாயை புதுமையாக எழில் கொஞ்சும் விதமாக படைத்தல்.

 1. இயற்கை அன்னையை அழிவில் இருந்து மீட்டு எழிலாக்குதல்

மனித இனத்தை மாயையின் பிடியில் இருந்தும் அழிவின் பிடியில் இருந்தும் மீட்டல்.

மாணாக்கர்:  33. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் என்பது என்ன?

ஆசிரியர் 33: ஆத்மஞானம் பெறச்செய்யும் தியானம் ஆத்மதியானம் எனப்படும்.

நம் அனைவருக்குள்ளும் எப்பொழுதும் இரு குரல்கள் ஒலிப்பதை கேட்டிருப்போம்.

ஒரு குரல், உலகநிகழ்வுகளோடு நம்மை தொடர்புபடுத்தும் மனத்தின் குரல்.

இன்னொன்று, பரம்பொருளுடன் நம்மைத் தொடர்புபடுத்தும் ஆன்மாவின் குரல்.

ஆத்மஞானம் பெற மனத்தின் ஒலியை கட்டுப்படுத்தி ஆன்மாவின் ஒலி உரக்க கேட்கச்செய்திடவேண்டும். அதைச்செய்யும் வழிமுறைகளை உபநிஷதங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

நம்முள் இருக்கும் அன்ன, பிராண, மன, விஞ்ஞான ஆகிய நான்கு அடுக்குகளைக் கடந்து ஐந்தாம் அடுக்கான ஆனந்த மய கோசத்தை அடைவது பிரார்த்தனை. பிரத்தியாகாரத்திலும், தாரனணயிலும் நாம் பாவித்த இறைவனை உண்மையாகக் காணல் பிரார்த்தனை. இது மனதின் ஐந்து உணர்வு நிலைகளிலும் கைகூடும். அதில் துரிய நிலையில் கைகூடும் தியானம் துரிய பிரார்த்தனை. இந்த நிலையில் சித்தர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அஷ்டமா சித்தி கைகூடும். அரிய 64 சக்திகள் அல்லது சித்திகள் பெற முடியும்.

மாணாக்கர்: 34. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானத்தைப் பற்றிய சுருக்கம் என்ன?

 

<<மஹா பூர்ண ஆத்மதியானம்>> என்றால் <<ஆன்மாவை தூய்மைப்படுத்துதல்>>.

ஆசிரியர் 01: இது இயற்கையாக ஏற்படும் அதிகளவிலான உணர்ச்சிகளின் போது வெளிப்படும் எதிர்வினை செயற்பாடுகளை வெளிப்படா வண்ணம் ஆழ் மனதினை பரிசுத்தப் படுத்தும் செயற்பாட்டுக்கு பங்களிப்பு செய்யும் தியானம் ஆகும். பயம், பேராசை, அவமானம், கோபம், பொறாமை மற்றும் இதுபோன்ற பல அம்சங்கள் இதில் உள்ளடங்கும். இது போன்ற உணர்வுகள் ஆழ்மனதுடன் தொடர்புபடும் போது இதற்கு ‘சம்ஸ்கரஸ்’ என்று பெயர். அவர்கள் வெளிச்சம்-நிறைந்திருக்கும் உணர்வை மாற்றிக் கொள்வதால் சமநிலையில் இருந்து வீழ்வதே அவர்களின் அக வளர்ச்சியை பாதிக்கின்றது. இந்த மஹா பூர்ண இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம், பயங்கரமான எதிர்வினைகளை நிலைமாற்றுவதில் ஒரு பலமான தாக்கத்தை செலுத்துகின்றது. அதை இலகுவாக அகற்ற ஒரு சிறந்த வழிமுறையாக இது திகழ்கின்றது. இது உங்கள் உள்ளத்தில் அமைதியை கொண்டுவருவதோடு, இணக்கமான பதில்களை கூறும் பண்பையும்  வளர்க்கின்றது. இணக்கமுள்ள செயற்பாடுகளை உள்ளத்தால் எடுத்து செயற்படும்போது ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்ட வாழ்க்கை உருவாகும். உலகளாவிய ரீதியில் இந்த தியானம் இருக்கின்றது, அன்றாட வாழ்க்கையில் இது பற்றிய முன்னைய அறிவேதும் இல்லாமல் அனைவராலும் இப்தியானத்தை செய்யலாம்.

மஹா பூர்ணஆத்மா இன்னுமொரு செயற்பாட்டையும் பூரணப்படுத்துகிறது. இது உங்கள் ஆத்மாவை பரிசுத்தப்படுத்த உதவுவது மட்டுமல்லாது, எமது உணர்வுகளில் உள்ள தீய சக்திகளையும் அழிக்கும்.

விதியை வெல்ல ஒரு எளிய மார்க்கம்….சம்மதம் உயிர் ஞான மார்க்கம். அகத்தியன் தலைமையிலான நம் சித்தர்களின் மார்க்கம்.

 

மாணாக்கர்: 35. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் கலை !!!!!!!! …….எனும் ….சாகாகலை….

ஆசிரியர் 35: ஆத்மாதான் உணர்ச்சி எனும் உடலாக வடிவம் எடுத்து நிற்கிறது. ஆத்மாவும், உடலும் பேதா அபேதம் அற்ற ஒரே பொருளாக உள்ளது. இதுவே உண்மை. தாயின் மடியில் புகுந்த ஆத்மாதான் அந்த சரீரத்தை செய்துகொண்டு வந்தது. இச்சரீரத்தை தன் விருப்பப்படியே செய்துகொள்ளும் குணம் ஆத்மாவுக்கு உண்டு. ஆத்மாவின் எண்ணமே சரீரமாக வடிவெடுக்கிறது. மனம் விரிந்து சரீரமாக மாற்றம் அடைகிறது.

கருவறையில் தனது சரீரத்தையே ஆத்மாவாக பாவித்து வந்த சிசுவிற்கு கருவறையே அதன் உலகம். கருவறையில் தான் எண்ணியதை எண்ணியவாறு முடித்திட்ட ஆத்மா அதுவாகவே வெளியேறுகிறது.

கருப்பையை விட்டு உடலோடு கூடிய ஆத்மாதான் வெளியேறி சிசுவாக ஜனிக்கிறது. அதுவரை உடல்தான் ஆத்மா என பழகி வந்த அந்த சிசுவுக்கு உலகில் தாய் தந்தை நட்பு சொந்தம் பந்தம் என அதன் உலகம் விரியும் போது அது, தான் ஆத்மா என்ற கவனம் விட்டு உலகமேதான் என அனுமானித்து தன் கவனத்தில் உள்ள சரீரத்தை மறந்துபோகிறான்.

அப்போது தான் அவனுக்கு பயம் எனும் உணர்வு தோன்றுகிறது. எண்ணத்தால் உண்டான சரீரம் எண்ணம் கேட்டு போகும் போது செத்துபோகிறது.

என்றாவது ஒரு நாள் இந்த சரீரம் தன்னிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆத்மா சலிப்பு அடைந்து விட்டு இனியும் இந்த சரீரம் உதவாது எனும் கட்டத்தில் அதை தன் கவனத்தில் இருந்து விடுவிக்கிறது. அதுவே மரணம். ஆத்மாவை நாம் கவனிக்க ஆத்மா நம் சரீரத்தை கவனிக்கும் . இதுவே சாகாகலை எனும் ஆத்மகலை.

இயல்புணர்வு மட்டும்தான் ஆத்மா. இயல்புணர்வு எங்குண்டோ ஆத்மா அங்குண்டு. இயல்புணர்வும், உணர்ச்சியும் பொருந்தவேண்டும்.

மாணாக்கர்:  36. ஆத்ம தியானத்தினால் கிடைக்கும் பலன்கள் என்ன?

 1. வைராக்கியமும் வல்லமையும் ஒருங்கிணைந்த தைரியமான மனம்
 2. பிணிகளில் இருந்து விடுபடல்
 3. அதியற்புதமான ஆன்ம வலிமை
 4. தன்னம்பிக்கை வளர்ச்சியும், அதீதமான தெளிந்த அறிவும்
 5. உயர்ந்த ஞாபகசக்தி
 6. சலனமற்ற தூக்கம்
 7. உலகுடன் இசைந்துவாழும் இயல்பு
 8. எதையும்தீர்க்கமாக உணர்ந்தறிதல்
 9. புலன் வழிச் செல்லா நுண்ணறிவு.
 10. தெளிந்தவிளக்கமுள்ள அறிவு
 11. வெற்றிகரமான செழுமையான வாழ்வு
 12. வெற்றிகரமாக பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றல்
 13. அறிவு விளக்கத்தினால் ஐயமற்ற அறிவின் விழிப்பு நிலை
 14. சீரான ஒளிமயமான வாழ்வு
 15. மன அமைதி
 16. சுய ஆத்ம அறிவு
 17. சுய ஆத்ம போதம்
 18. பேரானந்தம்

தவநிலைகளும் பயன்களும்

இதுவரை உலகம் அறிந்திராத அகத்தியன் தலைமையில் பல நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பூரண பொக்கிஷம் எனும் புனித ஆத்மவேதம் அகஸ்தியர் சித்தர் பெருமானால் புவி மக்களுக்கு அருளப்பட்டது.

இதுவரை இருந்த தியான முறைகள் அனைத்துமே மாயை ஆன உடலையும் மனதையும் மட்டுமே மையமாக கொண்டது. ஆனால் நம் ஆத்மதியானம் முறைகளும், வயித்திய முறைகளும் உலகின் முதன் முறையாக அகஸ்தியரின் பூரண பொக்கிஷத்தின் உபதேச படி ஆத்மாவை மையமாக கொண்டது.

இங்கே மனமடங்க தனி மார்க்கம் ஏதும் தேவையில்லை.. ஆத்மாவை வணங்கும் போது, ஆத்மாவின் நிழலான மனமது அடங்கி ஆத்மாவில் ஒடுங்கும் அற்புதம் உணரலாம்.

அடுத்ததாக ஆத்மாவை நாம் மறந்த காரணத்தால் உயிரால் படைக்கப்பட்ட உடலை ஆத்மா தன் கவனத்தில் இருந்து விடுவிக்கும் போது அது நோய் எனும் சாபத்துக்கு ஆட்படுகிறது. நாம் ஆத்மாவை கவனத்தில் கொண்டு ஆத்மாவை பிரார்த்திக்கும் போது ஆத்மா நம் சரீரத்தை தன் கவனத்தில் கொண்டு வரும் போது உடல் பிணிகள் அனைத்தும் மருந்துகள் ஏதும் இன்றியே அகன்று விடுகிறது.

அதிசயம் ஆனால் ஆத்மா மட்டுமே உண்மை..

…………. ஆத்மாவை கடவுள்

மாணாக்கர்:  37. நமது இயல்பை கவனித்தால் அழியா தேகம் வாய்க்குமோ?

ஆசிரியர் 37: ஸ்தூல தேகத்துக்கு தேவை பிராண வாயு, அது நாசி வழி சுவாசம்.

சூக்கும தேகத்துக்கு தேவை பிராண சக்தி. அதுவே உச்சி வழியே நடக்கும் ஆத்ம சுவாசம்.

அழியா ஆத்மதேகம் வேண்டுமாயின் முழு கவனத்தையும் ஊனுடலில் இருந்து விடுத்து பூரணமாகிய ஒளி வடிவாகிய இயல்பார்ந்த விஞ்ஞானம் தேகத்தில் கவனத்தையும், இயல்பையும் பொருத்தி பழக வேண்டும்.

நம் கவனத்தில் எதுவாக நாம் இருக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவோம். ஆத்மாவில் மனம் அடங்கலே முக்தி. ஆத்மாவை அடைதல் மிகவும் சுலபம். அத்வைதக் கலை. சாகா கலை என்னும் ஆத்மகலை.

மாணாக்கர்: 38. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் எனக்கு பலனளிக்கிறது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?

ஆசிரியர் 38: அது தானாகவே வெளிப்படையாகும். நீங்கள் ஒரு நல்ல உணவை உட்கொண்டால், நீங்கள் திருப்தியடைந்தவுடன் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அதேபோல், நீங்கள் ஆத்மதியானம் மந்திரத்தை ஜெபிக்கும்பொழுது, அது உங்களுக்கு பலனளிக்கிறது என்பதை எவ்வித சந்தேகமுமின்றி தெரிந்து கொள்வீர்கள். ஆத்மதியானம் மூலம் நீங்கள் உன்னதமான இன்பத்தை அனுபவிப்பீர்கள்.  உடல் புலன்கள் தரும் இன்பதைவிட அதிக அளவு திருப்தியைத் தரும் ஒரு ஆன்மீக இன்பத்தை பெறுவீர்கள் என வேதங்கள் கூறுகின்றன.  ஆகவே மந்திரம் உங்களுக்கு பலனளிக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி. நீங்கள் கெட்ட செயல்களைத் தரும் சூதாட்டம், மது அருந்துதல், சட்டவிரோத பாலியல் உறவு, மாமிசம் புசித்தல் போன்றவற்றில் அக்கறை இழக்க ஆரம்பிப்பீர்கள். உயர்ந்த இன்பத்தை அனுபவிப்பதன் மூலம் அற்ப ஆசைகளை நீங்கள் மறந்து விடுவீர்கள். ஆத்மதியானம் பலனளிக்கிறது என்பதை அப்பொழுது தெரிந்து கொள்வீர்கள்.

மாணாக்கர்: 39. இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் செய்வதால் வரப்போகும் துன்பத்தை நீக்கிக்கொள்ள முடியுமா?

ஆசிரியர் 39: தீவினைகள் மூன்று வகைப்படும். அவையாவன: வந்தவை, வந்திருப்பவை, வரவிருப்பவை. இவற்றைத் தொலைக்கக்கூடியது நாமஜபம்.

நோய் வந்தால் சில மருந்துகளை உட்கொண்டு நோயை நீக்கிக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் நோயையும் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டுவிடவும் இயலும் அல்லவா?

அதுபோல், வரவிருக்கும் தீவினைகளையும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு மேற்கொள்ளப்படும் ஆத்மதியானம், தியானம் போன்ற தவ சாதனைகளினால் விலக்கிக் கொண்டு விடலாம்.

அல்லது வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிடலாம்.

சில பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றாலும் துன்பங்களை நீக்கிக்கொள்ள முடியும்.

பொதுவாக மாசில்லாத பக்தி கொண்டவர்கள், துன்பங்கள் நீங்கவேண்டும் என்றுகூட இறைவனிடம் வேண்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருளால் பெறுகிறார்கள்.

மாணாக்கர்:   40. ஆத்ம ஞானம் விளக்கம் என்ன?

ஆசிரியர் 40: ஆன்மீகத்தின் உயர் நோக்கமாக சொல்லப்படும் கருத்து யாதென்றால் பிறப்பு, இறப்பு தளையறுத்து ஆத்மஞானம் பெற்று வீடுபேறு எய்துவதே என பல ஆன்மீக நூல்கள் உரைக்கின்றன. இதில் ஆத்மஞானம் என்பது என்ன என்று பல ஆன்மீக வல்லார்க்கு தெரிவதேயில்லை. வெறுமனே சடங்குகள் ஆற்றுவதும், வேள்வி இயற்றுவதும், உருவ வழிபாடு செய்வதும் இந்த ஆத்மஞானத்தைப் பெற்றுத்தராது, என்றால் மோட்சத்தை தராது என்று பொருள். அப்படியானால் இவை வெறும் காலக் கழிவும், பணச் செலவுமே ஏற்படுத்துகின்றன என்று சொல்லலாம். ஆத்மஞானம் என்றால் என்ன என்று ஆனந்த மூர்த்தி எனப்படும் பிரபாத் ரஞ்சன் சர்க்கார் விளக்குகிறார். அதன்படி ஒழுகினால் பயன் அடையலாம்.          

“ஆத்மஞானமே ஞானமாகும்”. ஆத்மஞானம் என்பது என்ன? தன்னறிவு என்றால் என்ன? தன்னையுணர்தல் என்றால் என்ன? இதோ பாருங்கள், ஒவ்வொரு வாழுயிரிக்கும் தன்னைக் காண்பதற்கல்லாமல் பிறரைக் காண்பதுவே பழகிப் போன இயல்பாக உள்ளது. அதாவது, எப்பொழுதெல்லாம் ஒருவர் அகம்நோக்கிய பொருளாக ஆகின்றாரோ அப்பொழுது அவர் பிறரை புறவயச் சரிஎதிர்ப் பகுதியாகக் கொள்கிறார், ஆனால் ஒருபோதும் தன்னை (ஆத்மாவை) புறவயச் சரிஎதிர்ப் பகுதியாகக் கொள்வதில்லை. ஒருவருடைய அகம்நோக்கிய நிலை ஒருபோதும் புறவயத் தன்மையோடு இணைவதில்லை என்பதுதான் தொந்தரவாக உள்ளது. நீங்கள் மிகப் பலவற்றை அறிய விரும்புகிறீர்கள் ஆனால் ஒருபோதும் உங்களை (ஆத்மாவை) அறிய விரும்புவதில்லை.

 உமது “ஆத்மாவே” உமக்கு மிக நெருக்கமான பொருள் ஆகும், ஆயினும் நீங்கள் ஒருபோதும் உமது ஆத்மாவை அறிய விரும்புவதில்லை. அது தான் இங்கு இரங்கத்தக்கதாக உள்ளது, அது தான் இங்கு தொந்தரவாக உள்ளது. ஆத்மஞானம் என்பது காட்சிப்பொருளற்ற தன்மையைக் கொண்ட  ஒரு நிலையைக் குறிக்கின்றது. அது, ஒருவர் தமக்குள்ளேயே ஒருவரது சொந்த ஆத்மாவையே பார்த்துக் கொண்டபடி வேறு எந்த புறவயத்தன்மை நோக்கிய அறிவுசார் அல்லது மனத்துக்குரிய செயல்திறனை வழிநடத்தாது இருப்பதாகும்.  

 உங்களிடம் மனத்துக்குரிய செயல்திறன்கள் மிகப் பல உள்ளன. உங்களிடம் அறிவுசார் செயல்திறன்கள் கூட மிகப் பல உள்ளன, ஆயினும் நீங்கள் உமது மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான செயல்திறன்களைப் எப்போதும் பிற காட்சிப் பொருள்களிடத்தே தூண்டிவிட்டு அலைக்க முயல்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான எல்லா செயல்திறன்களையும் ஒருக்கி (றiவானசயற) இச்செயல்திறன்களை உமது ஆத்மாவை நோக்கித் தூண்டி வழிநடத்தி, அதோடு ஏதொரு காட்சிப் பொருளுலகோடும் தொடர்புகொள்ளாமல் அமைதியுடன் இருப்பீர்களானால் உங்கள் மனதினதும், ஆத்மாவினதுமான அந்த நிலையே, அந்த சார்பியல் நிலையே ஆத்மஞானமாகும். இதுவே மெய்யான ஞானமாகும். ஏனென்றால் பிற அறிவுகள் யாவும் சார்பியல்களால் மாசுபட்டுள்ளன.

இந்த ஞானம் ஏதொரு இரண்டாம் புறவயத்தன்மையை சாராததால் முழுமைப் பண்பு கொண்டதாக விளங்குகிறது, இதுவே ஆத்மஞானமாகும். இந்த ஆத்மஞானத்தைப் பெற ஒருவர் பல நூல்களைப் படிக்கத் தேவையில்லை.

ஒருவர் இந்த ஆத்மஞானத்தை அடைய இயல்பான இயல்புணர்வை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அதோடு பரம்பொருளிடத்தில் அன்புறு பக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.  இதுவே இயல்பார்ந்த விஞ்ஞானம் தியானம் ஆகும். மேலும் இந்த செயன்முறையில், தன்னையுணர்தலுக்கு தன்னையுணர்தலுக்கு (ஆத்மஉணர்தலுக்கு) பின்னே ஒருவர் வீடுபேறு என்னும் மோட்சம் அடைகிறார்.

மாணாக்கர்:   41. ஆத்மநிலை அடைவது எப்படி?

ஆசிரியர் 41: அஷ்டாங்க வழியில் இயம நியமங்கள் படி அறவழி வாழ வேண்டும். ஆசன பிராணாயாம முறைகளால் அன்னமய கோஷம் என்ற பரு உடலையும், மனதையும் நெறிப்படுத்தி சுத்தி செய்ய வேண்டும். இதன் பின் பிராணயாமத்தில் வாசி உருவாக்க வேண்டும். வாசி என்ற வாகனத்தைப் பயன்படுத்தி, பிராணமய கோசத்தை அறிந்து அதன் செயல் பாட்டை அறிந்து கடக்க வேண்டும்.

வாசியின் உதவியால் பிராணமய கோசத்தை கடந்து, மனோமய கோசத்துள் நுழைய வேண்டும். அன்னமய கோசமும் பிராணமய கோசமும் பரு உடல் சார்ந்தவை. ஐந்து பொறிகளையும் புலன்களையும் உள் முகமாகத் திருப்பவேண்டும். அப்பொழுதுதான் மனோமய கோஷம் வந்து அடைவோம். இதற்கு வாசியைப் பயன்படுத்தி பிரத்தியாகாரம் நிலை அடையவேண்டும். அப்பொழுது மனமய கோசமும், அதன் தொகுப்பான அந்தகரணங்கள் வசப்படும்.

அந்தகரணங்கள் வசப்பட்டால் தாரணை நிலை உருவாகும். அதனால் விஞ்ஞானமய கோஷம் புலப்படும். இதற்கு வாசியும், தாரணையும் பயன் படும் .குறிப்பாக வாசி தாரணை பயன்படும். வாசி தாரனணயால் பரு வுடல் வலுப்பெறும். நரைத்த முடி கறுப்பாகும். அதாவது உடல் இளமை பெறும். வாசி உதவியால் வாசி தாரணை கை கூடினால் விஞ்ஞான மய கோசத்தை கடந்து ஆனந்த மய கோஷம் வந்து சேர்வோம். ஆனந்த மய கோசத்தில் இறைவன் நம்முள் இருக்கிறான். இறைவன் வாழும் ஆனந்தமய கோசத்தின் கதவைத் திறந்து நம்முள் வாழும் இறைவனைத் தரிசித்தல் பிரார்த்தனை.

நம்முள் வாழும் இறைவனைப் பல ரூபங்களிலும், ஐந்து உணர்வு நிலைகளிலும் தரிசிக்க முடியும். இந்தத் தொழில் நுட்பமே நாம் நம்முள் பயணிக்கும் வழி. பிற தியான முறைகள் நம்முள் பயணிக்கும் வழியைச் சொல்ல வில்லை.

மாணாக்கர்:   42. ஆத்மயோக சித்திக்கு வழிமுறைகள் என்ன?

ஆசிரியர் 42: 1. என்னிடம் மகத்தான சக்தி இருக்கிறது அதை நான் சீக்கிரம் தெரிந்து கொள்வேன். நான் யார் என்பதை தெரிந்து கொள்வேன்.

 1. தீட்சை பெறுதல், மனதை ஒருநிலைப் படுத்துதல், தியானத்தில் அமைதியாக இருத்தல்: தியானம் என்பது அமைதியில் உள்ளது அதில் ஆத்மா பேசுகிறது. நாம் பேசி வீணாக்கிய சக்தி அந்தராத்மாவை காணும் தியானம் ஆகும்.
 2. தீட்சை: உண்மையை உணர்தல், ஆத்மாவை உணர்தல், ஆழ்நிலை தியான அனுபவங்களை பெறுதல்.
 3. தினசரி காலை, மாலை தியானம் செய்தல். தினமும் ஒரு முறை ஆசனம், பிராணாயாமம் செய்தல்.
 4. மது, மாமிசம், கேளிக்கை கூடாது. எப்போதும் உண்மையே பேச வேண்டும். கோபம் வரவே கூடாது. மிகவும் திடசித்தமும், வைராக்கியமும் இருக்க வேண்டும்.
 5. தியானத்தில் சில சித்திகள் கிடைப்பதை மற்றவர் மேல் பிரயோகிக்கவோ, வெளியே காட்டவோ கூடாது. சாதனைகளை மிகவும் ரகசியமாக காப்பாற்றி வர வேண்டும்.
 6. எப்போதும் எதுவும் தெரியாதது போல் அமைதியாக இருக்க வேண்டும். பலருக்கும் அதையோ இதையோ செய்வது கூடாது.
 7. நீங்கள் பெற்ற சக்திகள் அத்தனையும் உங்களுக்காகத்தான். உங்கள் நன்மைக்கே. அதனால் நீங்கள்தான் பயன் பெற வேண்டும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

மாணாக்கர்:   43.  ஆத்மயோகப் தியானத்தின்சிறப்புகள் என்ன?

ஆசிரியர் 43: 1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.

 1. உள்ளுறுப்புகளையும், வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும், திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
 2. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப்படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
 3. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
 4. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

மாணாக்கர்:   44. ஆத்ம விசாரம் என்றால் என்ன?

ஆசிரியர் 44: இவ்வாறு உடல் சுகங்களிலிருந்து விடுதலை பெற்ற பின் ஐம்புலன்களால் வரும் சுகங்களை தத்தம் பொறிகளில் நிலைநிறுத்தும் ஆற்றலைப் பெற முயற்சி செய்ய வேண்டும். புலன்களும், பொறிகளும் அமைதி பெற்றால் மனம் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வளவு காலம் உடல் சுகத்திற்காக வெளியே சென்று அலைந்த மனம் உள்நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.

இவ்வாறு உடலை விட்டு நீங்கிய மனதின் இயல்பு மெல்ல மெல்ல ஆத்மாவில் ஒன்றும்போது தான் யார் என்ற உண்மை விளங்கும். தான் யார் என்ற நிலை தெரிய வரும்போது தான் எங்கிருந்து வந்தோம் என்ற சூட்சுமம் புரிய வரும். இதுவே ஆத்ம விசாரம் எனப்படும்.

மாணாக்கர்:   45. தீட்சை என்றால் என்ன?

ஆசிரியர் 45: ஆத்மயறிவில் ஆழ்ந்து ஐக்கியமாகிய நிலையே ஞானம்.

அந்த இடத்திலேயே அது நிலைத்து நின்று விட்டால் அந்த மீளாத நிலைக்கு பெயர் சமாதி.

தன்னிடத்தே தான் பெற்ற ஆத்மாவின் இயல்பை உபதேசிப்பது தீட்சை ஆகும்,

ஆத்ம உணர்வை பெறுவதே தீட்சை. இதைத் தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது”, “உணர்வால் உணர வைப்பது” என்றனர். நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரீரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

மாணாக்கர்:   46. தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

ஆசிரியர் 46: தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

2 . போதை, புகை போன்ற பழக்கங்களை அறவே விட வேண்டும்.

3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.

இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு, இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.

மாணாக்கர்:   47. சற்குரு என்பவர் யார்? குருவின் முக்கியத்துவம் என்ன?

“மாதா, பிதா, குரு தெய்வம்”.

ஆசிரியர் 47: ஒருவருக்கு தாயும், தந்தையும் இயற்கையாக கிடைத்து விடுகிறது.

தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை அடைந்து உபதேசம்,

தீக்ஷை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும்.

இதுவே இறை விதி.

குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும், கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்கள் இருந்தார்கள்.

இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.

அருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.

வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.

குருவின் முக்கியதுவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய்“ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.

இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை, முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி கட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.

நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விசயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விசயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.

யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்கிறரோ அவரே ஒருவற்கு குரு ஆவார். இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்.

மாணாக்கர்:  48. பிறவி நோக்கம்? முக்தி அடைய எளிய வழி?

ஆசிரியர் 48: பிரபஞ்சம் முழுதும் பஞ்ச பூதமாகி, பல்லுயிராகி , பல்லுருவாகி, ஓம் எனும் ஓர் அணுவுக்குள்

அகாரம்-அறிவு, உகாரம் -உயிர், மகாரம்- மனம்,

எனும் பிரணவத்தின் பொருளாகி, நாதமான பெண்ணாகி, ஜோதியான ஆணாகி, ஆணுக்குள் பெண்ணாகி, பெண்ணுக்குள் ஆணாகி, நிற்கும் பரம் பொருளை அடைவதே முக்தி.

அந்த பரம்பொருலான ஆத்ம நம்முருவாகி வந்துள்ளது. அதுவே உண்மை. உயிர் படைத்த உடலை வைத்துக் கொண்டு நான் என்று பிதற்றுவது தான் மாயை. அந்த மன மாயை நீக்கி நான் ஆத்மா என்று தியானித்து அழியாத உயிர் நிலை அடைதலே முக்தி.

மாணாக்கர்:  49. ஆத்மநிலை எனும் முக்தி எப்படி அடைவது?.

ஆசிரியர் 49: வெறும் பக்தியால் மட்டும் முக்தி அடைய இயலாது. ஞான மார்க்கமாக நாம் எப்படி பிரபஞ்சத்தில் இருந்து ஆத்மராகி கருவாகி சரீரமாகி வந்தோமோ, அவ்வழியே சென்று இயற்கையோடு ஐக்கியமாதலே முக்தி.

ஆத்மஞான மார்க்கமாக உடலை ஆத்மராக்குதலே முக்தியாகும். ஆதியானது ஆத்மா. ஆதியான ஆத்மநிலை அடைதலே சமாதி நிலை எனும் முக்தி நிலை. சித்தர்களின் முக்தி மார்க்கம் இப்படி எளிமையாக இருக்க உருவ வழிபாடும் பழைய புராணங்களும் எங்கே முக்திக்கும நோயற்ற வினைகளற்ற வாழ்வுக்கும் வழி சொல்கிறது?.

ஆத்மாரான கடவுள் நம்மை படைக்கும்போதே, அவனை அடையும் வழியையும் கொடுத்தே அனுப்பியுள்ளான். ஆத்மா பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருந்தாலும் நம்மிடம் உள்ள நமக்கு சொந்தமான உடலை உயிரை கொண்டே ஆத்மராக்கி விட்டால், ஆத்மா பரவெளியாகி விடும் இதுவே அழிவில்லாத வீடுபேறு.

சரீர நிலைக்கும் ஆத்மநிலைக்கும் இடைப்பட்டது கவனம் தான். கவனம் சரீரத்தில் இருப்பதை விடுத்து ஆத்மாவில் நிலைக்க செய்வதே உயர்ந்த ஆத்மநிலை, ஆத்மகலை சரீரம் காலத்துக்கு உட்பட்டது ஆதலால் காலனால் வீழ்த்தபடுகிறது. ஆத்மா காலத்துக்கும் காலனுக்கும் அப்பாற்பட்டது, அழிவற்றது.

கவனத்தை அழிவற்ற ஆத்மாவில் வைக்க பழகி கொண்டால் நாம் ஆத்மாவாகி போவோம். நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறிப் போவோம். மனதுக்குஅப்படி ஒரு அதீதசக்தி உண்டு. ஆகவே மனபலத்தை கொண்டு ஊன் தேகத்தை கவனத்தில் இருந்து விடுத்து ஆத்மாவில் கவனத்தில் நிலைத்து அழிவில்லா ஆத்மா தேகமாக மாற்றிவிட்டால் பிணி மூப்பு சாக்காடு எனும் சரீர சாபங்களில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

இதுவே முக்தியின் ரகசியம். நமக்கு சொந்தமான ஆத்மாவை கொண்டுமட்டும் தான் முக்தி அடைய இயலும். நமக்கு முக்திக்கான வழியைத்தான் குருமார்கள் காட்டுவார்கள். நம் முன்னேற்றத்துக்கு நாம் தான் முயல வேண்டும். ஆத்மா இன்றி எந்த குருவும் இல்லை, எந்த கடவுளும் இல்லை, ஆத்மாவே அனைத்துக்கும் மூலம். ஆதியானதும் அனைத்துக்கும் மூலமானதும் ஆத்மா ஒன்றே.

இப்படி வெளிப்படையாக யாரும் உரைத்தது இல்லை. ஆத்ம தியானத்தில் முக்தி மார்க்கத்தை மிகவும் எளிமையாக்கி உள்ளனர்.

மாணாக்கர்: 50. அழிவில்லாத ஒளிதேகம் அடைவது எப்படி?….

ஆசிரியர் 50: நிஜமான ஆத்மசரீரம் அசையும்போது நிழலான ஊன் சரீரம் அசைகிறது. அவனன்றி ஏதும் அசையாது. அந்த ஆத்மசரீரம் மட்டுமே கடவுள். அவரவர் சரீரமே கோயில், அவரவர் ஆத்மாவே கடவுள்.

நம் உருவத்திலே நம்மோடு பொய் சரீரம் கடந்து உள்ளாய் ஒளி சரீரமாக ஒளிந்திருக்கும் கடவுளான ஆத்மா தன் கவனத்தில் இருந்து இந்த பொய் சரீரத்தை விடுத்தலே மரணம்.

நம்முள் கடந்து உள் கடவுளாய் ஆத்மா ஒன்றே உறை வதறியாது புறத்தில் தேடினால் இறுதி வரை கடவுளை காண இயலாது. காலன் மட்டுமே எதிர்படுவான்.

ஊன் சரீரம் மறந்து ஆத்மா சரீரம் கவனத்தில் கொண்டு அழியா நிலை அடைதலே ஆத்மகலை.

ஆத்மாவே கடவுள்…. அகம் பிரம்மாஸ்மி….

மாணாக்கர்:  51. ஆத்மதியானம் எங்கே கற்றுக் கொள்வது நான்?

ஆசிரியர் 51: உண்மை மற்றும் ஆனந்தத்தின் பாதையில் இருப்பேன் என்ற உறுதியுள்ளவரானால் நீங்கள் ஏற்கனவே இதை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றர்த்தம். இது தானாகவே இயங்கும் ஓர் அகவியல் முறை. இந்த தியானத்தில் தங்களுக்குத் தேவையான அறிவை வழங்குவார்கள், அவற்றை நீங்கள் கடைபிடித்து விரைவான பலனைக் காணலாம். ஆனால் ஒன்றில் கவனம் கொள்ளுங்கள். எந்த ஒரு கலையையும் போல இதுவும் தங்களுக்குள்ளேயிருந்து துளிர்ப்பது தான். எந்த ஒரு ஆசிரியரும் அவ்வறிவை உங்களுக்கு அப்படியே புகட்ட முடியாது. பாதை வேண்டுமானால் காட்டலாம், ஆனால் முடிவு செய்து பயணம் மேற்கொள்வது தங்களையே சாரும். இது உங்களுடைய பொறுப்பு மட்டுமே. மேலும் தகவல்கள் தேவைப் பட்டால் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும் – info@aaacenter.org

 

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்லவேண்டுமென்றால் நாம் நமது இயல்புகளை கவனிக்க துவங்கவேன்டும். கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணங்களை ஒரு செயலாக எண்ணி செய்யக்கூடாது. அது தண்னிச்சையாக நடைபேற வேண்டும். நம்முடைய இயற்கையான செயல்களை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி. எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். முதலில் இருப்பதை விட்டுவிட்டு மேலும் பார்ப்பதுதான் குழப்பத்தை விளைவிக்கிறது.

 நான் அடைந்தேன். அடைந்தது போய்விட்டது. இப்போது என்ன செய்வது?” என்பதெல்லாமே மனப் பிரமைகள் தான்.

கேள்வியும், பதிலும் மவுனத்திலேயே வெளிப்பட்டன என்ற அற்புதம் எப்படியோ, அப்படியே இந்த தொடர் தரும் சிந்தனைகள் நமக்கு நல்ல ஆனந்தத்தை தருகின்றன. இந்த ஆனந்தம் என்றும் தொடர, வடபுலம் நோக்கிய சித்தரை வணங்கி மகிழ்வோம்.